நாட்டை பிாிக்கும் சிந்தனையை அடியோடு அழிப்பேன்..! 5 தமிழ்கட்சிகளுக்கு கோட்டா எச்சாிக்கையா?
இலங்கையில் பயங்கரவாத அமைப்புக்களுக்கும், பயங்கரவாத சிந்தனைகளுக்கும், நாட்டை பிாிக்கும் சிந்தனைகளுக்கும் இடமில்லை. என கூறியிருக்கும் ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாய ராஜபக்ச,
அந்த அடிப்படையிலேயே 5 தமிழ்கட்சிகள் ஒன்றிணைந்து முன்வைத்திருக்கும் 13 அம் ச கோாிக்கைகளை நான் நிராகாித்திருக்கின்றேன். நாட்டை பிாிக்கும் உாிமை எவரு க்குமில்லை. அந்த சிந்தனையை அடியோடு அழிப்பேன். எனவும் கூறியுள்ளாா்.
நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,எமது தேசத்தில் பயங்கரவாத அமைப்புக்களுக்கு இடமில்லை.
அவர்கள் வேரோடு அழிக்கப்படுவார்கள். இறையாண்மை கொண்ட இந்த நாட்டை பிரிக்க முயற்சிக்கும் எவருக்கும் அனுமதி கொடுக்கமாட்டேன்.இந்நிலையிலேயே தமிழ் கட்சிகள் ஐந்தும் ஒன்றிணைந்து முன்வைத்த கோரிக்கையினை
அடியோடு நிராகரிக்க வேண்டியதாகவிருந்தது.இதேவேளை இராணுவத்தினருக்கான சிறந்த மருத்துவமனை ஒன்றினையும் கட்டினோம். பொலிஸ் சேவையினை மக்களின் நட்பு சேவையாக மாற்றுவோம்.
பயங்கரவாதம், போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் பாதாள உலக குழுவினர் புத்துயிர் பெற வாய்ப்பில்லை. அதேவேளை நாட்டுக்கு சிறந்த பொலிஸ் சேவை தேவை என்றார்.