கிளிநொச்சி மாவட்டத்தில் 9 பில்லியன் செலவில் 4 வீதிகள் புனரமைப்பு..! புனரமைப்பு பணிகள் இன்று தொடங்கியது..
கிளிநொச்சி முறிகண்டி- கனகபுரம் பகுதிகளை இணைக்கும் 9.21 கிலோ மீற்றா் நீள மான வீதியை புனரமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சினால் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.
முறிகண்டி அக்கராயன் வீதியிலிருந்து அறிவியல்நகர், பொன்னகர் ஊடாக செல்லும் குறித்த வீதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் மற்றும் ஆடை தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல காணப்படுகின்றன.
இதேவேளை பல அரச திணைக்களங்களையும் கொண்டுள்ள குறித்த பகுதியில் இவ்வீதியானது மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இந்நிலையில் குறித்த வீதியினை அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப நிகழ்வு
இன்று பகல் 1 மணியளவில் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது குறித்தவீதி அபிவிருத்திக்கான பெயர் பலகை திரை நீக்கம் செய்யப்பட்டதுடன்,
வீதி புனரமைப்பிற்கான நிகழ்வும் இடம்பெற்றது. இதன்போது சிவஞானசோதி மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் இதுபோன்று நான்கு பிரிவுகளாக வீதிகள் புனரமைக்கப்படுவதாகவும்,
புலோப்பளை அல்லிப்பளை பகுதிகளை இணைக்கும் 3.57 கிலோமீட்டர் வீதியும், ராமநாதபுரம், தர்மபுரம் பகுதிகளை இணைக்கும் 7.56 கிலோமீட்டர் வீதியும், 10.54 உருத்திரபுரம் வீதியுமாக மொத்தமாக 9 பில்லியன் நிதியில்
அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.