கிளிநொச்சியில் பாாிய நிலத்தடி பதுங்குழி..! தமிழீழ விடுதலை புலிகளுடையதா..? பாாிய அகழ்வுக்கு திட்டம்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் பாாிய நிலத்தடி பதுங்குழி..! தமிழீழ விடுதலை புலிகளுடையதா..? பாாிய அகழ்வுக்கு திட்டம்..

கிளிநொச்சி - ஜெயந்திநகா் பகுதியில் நிலத்தடியில் கொங்கிறீட்டால் ஆன கட்டமைப் பு ஒன்று அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், அகழ்வு பணிகளை தொடங்கு வதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது. 

தனியாா் காணி ஒன்றிலேயயே இந்த கொங்கிறீட் கட்டமைப்பு அடையாளம் காணப் பட்டிருக்கின்றது. இன்று காலை குறித்த காணியில் புதிய வீடு ஒன்றை அமைப்பதற்காக குழி ஒன்றை அமைத்தபோது குறித்த பகுதி அவதானிக்கப்பட்டுள்ளது. 

அக்குழியிலிருந்து கல் ஒன்றை அகற்றியபோது அதிலிருந்து கண்ணிவெடி ஒன்றும் சில ரவைகளும் காணப்பட்டதை அடுத்து காணி உரிமையாளர் கிளிநொச்சி பொலிசாரிடம் தகவல் வழங்கியுள்ளார். அதனை தொடர்ந்து குறித்த பகுதிக்கு வருகை தந்த பொலிசார் சம்பவ இடத்தை அவதானித்துடன், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பகுதியில் மேற்கொண்டு 

எவ்வகையான பொருட்கள் காணப்படுகின்றன என்பது தொடர்பில் நீதிமன்றின் அனுமதியுமதியுடன் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த காணியின் உரிமையாளர்கள் 1995ம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த பகுதியை விட்டு வெளியுறி 2010ம் ஆண்டு குடியேறியுள்ளனர். 

இந்த நிலையிலேயே அவர்கள் புதிதாக வீடு ஒன்றை அமைப்பதற்கான பணிகளை இன்று மேற்கொண்ட நிலையில் இவ்வாறு மர்மமான கொங்கிரீட் கட்டமைப்பு ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நீதிமன்றின் கண்காணிப்பில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கதாகும். 

கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் காணப்பட்ட மர்ம கொங்கிரீட் தொடர்பான அகழ்வு பணிகள் நாளை இடம்பெறவுள்ளது. நாளைய தினம் விசேட அதிரடிப்படையினரால் குறித்த அகழ்வு பணிகள் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் இடம்பெறவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு