யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்திலிருந்து 10ம் திகதி சேவை ஆரம்பம்..! கட்டண விபரமும் வெளியானது.
யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்திலிருந்து திருச்சி, சென்னை இடையில் இம்மாதம் 10ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக சிவில் விமானசேவைகள் திணைக்களம் கூறியிருக்கின்றது.
கடந்த மாதம் ஒக்டோபர் 17 ஆம் திகதி ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரால் திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நவம்பர் 1ஆம் திகதியிலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு விமான போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கப்படும்.
என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து சிவில் போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல் எச்.எம்.எம். சி. நிமல்சிறி கருத்து தெரிவிக்கையில் எதிர்வரும் 10ஆம் திகதியிலிருந்து
சென்னை மற்றும் திருச்சிக்கான வர்த்தக விமானங்களின் சேவை ஆரம்பிக்கப்படும் வர்த்தக விமானங்களை இந்திய விமான நிறுவனம் ஒன்று இயக்குகிறது. ஏர் இந்தியாவின் சகோதர நிறுவனமான
அலையன்ஸ்-ஏர், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு ஏழு விமானங்களை இயக்க விரும்புகிறது என்று குறிப்பிட்டார். இதேவேளை, மேலதிகமாக, உள்நாட்டு விமான நிறுவனம் ஒன்றும்
யாழ்ப்பாணத்திலிருந்து தென்னிந்திய விமான நிலையங்களுக்கு வாரத்திற்கு மூன்று முறை விமானங்களை இயக்குவதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைக்கான ஒரு வழி கட்டணமாக இலங்கை ரூபாயில் 7,879 ஆக இருக்கலாம் இன்னும் உத்தியோகபூர்வமாக கட்டணம் அறிவிக்கவில்லை. பயண நேரம் 32 and 50 minutes இருக்கும் என்றார்.
இதேவேளை, தமிழ்நாட்டின் திருச்சி விமான நிலையத்துக்கும், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் இடையில், வாரத்தில் மூன்று விமான சேவைகளை நடத்தவுள்ளதாக பிட்ஸ் எயர் (Fits Air) நிறுவனம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.