வடகிழக்கு தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை மக்களிடம் கூறப்போவது நாங்களே..!

ஆசிரியர் - Editor I
வடகிழக்கு தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை மக்களிடம் கூறப்போவது நாங்களே..!

தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் நாங்கள். எங்களுடைய மக்கள் எவருக்கு வாக்களி க்கவேண்டும் என வழிப்படுத்தவேண்டியதும் நாங்களே. என கூட்டமைப்பின் நாடா ளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளாா். 

தென்மராட்சியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.பல்கலைக்கழக மாணவர்கள் 6 கட்சிகளை ஒன்றிணைத்தனர். அதில் ஒரு கட்சி தேர்தலை புறக்கணிக்கும்படி 

கூறிவிட்டு விலகியுள்ளது.வடக்கு – கிழக்கில் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த 16 பேர் உள்ளனர். இந்த நிலையில், மக்கள் தம்மைத் தெரிவுசெய்துள்ள நிலையில், 

அவர்களுக்கு பொறுப்புடன் கடமையாற்றவேண்டியது எமது கடமை என்றும், தாம் தமமது முடிவை நிதானமாக சிந்தித்தே அறிவிக்கவேண்டும் என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு