விடுதலை செய்யப்பட்ட 18 அப்பாவி மீனவா்களிடம் 10 மணிநேரம் விசாரணை நடத்திய நல்லாட்சி அரசு..!

ஆசிரியர் - Editor I
விடுதலை செய்யப்பட்ட 18 அப்பாவி மீனவா்களிடம் 10 மணிநேரம் விசாரணை நடத்திய நல்லாட்சி அரசு..!

இந்திய சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்து விடுதலை செய்யப்பட்ட யாழ்.மாவ ட்ட மீனவா்கள் 18 போ் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இலங்கையில் 10 மணித் தியாலங்கள் விசாரணை நடாத்தப்பட்டுள்ளது. 

இந்திய கடற்படையினரால் ஓக் 03ம் திகதி கைது செய்யப்பட்ட18 எழுவைதீவு மீனவர்கள் இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த மீனவர்களை விடுதலை செய்யக்கோரி பலரும் 

இந்தியத் தூதரகம் ஊடக வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் யாழ்ப்பாணம் மீனவர் ஒன்றிய சமாசம் ம்றும் ஊர்காவற்றுறை மீனவர் சங்கம் ஆகியன இணைந்து கடந்த 23ம் திகதி யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் முன்பாக 

கவன ஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுமட்டனர்.எழுவைதீவில் இருந்து கடற்றொழிலிற்காக சென்றிருந்த சமயம் கைது செய்யப்பட்டு சிறையில் வாழும் மீனவர்களை செய்ய நடவடிக்கை எடுக்க அமைக்க வேண்டும். 

எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் இந்தியத் துணைத்தூதரகம் ஊடாக குறித்த விடயம் டில்லியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. இதனையடுத்து நேற்றைய தினம் அனைத்து மீனவர்களும் விடுதலை 

செய்யப்பட்டதாக இந்தியத் தூதரகத்திற்கும் தகவல் வழங்கப்பட்டது.இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட 18 மீனவர்களும் நேற்றைய தினம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கியவேளையில் 10 மணிநேரம் 

விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே பயணத்தை மேற்கொள்ள அனுமதித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு