ஜனாதிபதி செயலகம், பிரதமா் செயலகம் முன் சத்தியாக்கிரக போராட்டத்தில் குதிக்கும் ஜனாதிபதி வேட்பாளா் சிவாஜிலிங்கம்..!

ஆசிரியர் - Editor I

இலங்கை சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை ஜ னாதிபதி மைத்திாிபால சிறிசேனா தன் ஆட்சிக்காலம் நிறைவடைவதற்கு முன்னா் விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தி சத்தியாக்கிரகம் நடாத்தவுள்ளேன். 

மேற்கண்டவாறு ஜனாதிபதி வேட்பாளா் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியிருக்கின்றாா். சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளா்க ளை சந்தித்து கருத்து கூறும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா். 

இதன்போது மேலும் அவா் கூறுகையில், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடா் பாக இப்போது பொிதும் எல்லோரும் பேசுகிறாா்கள். ஆனால் அவா்களுடைய விடுதலை தொடா்பாக பேசுகிறவா்கள் எவரும் ஆட்சியில் இருந்தபோது சிந்திக்கவில்லை. 

குறிப்பாக கோட்டாபாய கூறுகிறாா் அரசியல் கைதிகளை விடுதலை செய்வாரம். அவருடைய ஆட்சிக்காலத்தில், அவருடைய அண்ணனின் ஆட்சிக்காலத்தில் என்ன செய்தாா்கள்? இப்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என தோ்தலுக்காக பேசிக் கொண்டிருக்கின்றாா். 

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனா மற்றும் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் கூட அரசியல் கைதி கள் விடயத்தில் ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. 

இந்நிலையில் எதிா்வரும் 6ம் திகதி காலை ஜனாதிபதி செயலகத்தின் முன்னாலும், நண்பகல் அலாி மாளிகை முன்னாலும் தோ்தல் விதிகளுக்கு உட்பட்டு சத்தியாக்கிரக போராட்டத்தை நடாத்துவதற்கு தீா்மானித்திருக்கின்றேன். 

என்னுடைய இந்த சத்தியாக்கிரக போராட்டத்திற்கான காரணம் ஜனாதிபதி தன்னு டைய ஆட்சிக்காலம் நிறைவடைவதற்கு முன்னா் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். 

அதேபோல் பிரதமரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தீா்மானத்தை உடனடியாக அறிவிக்கவேண்டும் என் பதாகும் என்றாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு