தமிழில் பேசகூடாது..! உணவகம் மீது சட்டநடவடிக்கை எடுங்கள். அமைச்சா் மனோ அதிரடி உத்தரவு..
ஊழியா்கள் எவரும் தமிழில் பேசகூடாது என உத்தரவு வழங்கிய உணவகத்திற்கு எதி ராக விசாரணை நடாத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய அரச கரும மொழிக கள் அமைச்சா் மனோகணேசன் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவொன்றை இட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ள சமத்துவத்திற்கான உரிமையை மீறுவோர் குறித்து
சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அரச கரும மொழிகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக” அவர் கூறியுள்ளார். இதேவேளை, கொழும்பிலுள்ள பிரபல உணவகமொன்றில் தமிழ் மொழியில் உரையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 7 ஹொர்ட்டன் பிளேஸ் பகுதியிலுள்ள பிரபல உணவகமொன்றிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.குறித்த உணவகத்தில் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் மாத்திரமே உரையாட வேண்டும்
என அறிவிப்பு பலகை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிங்களம் ஆங்கிலத்தில் மட்டும் பேசவும்! தமிழுக்கு விதிக்கப்பட்ட தடையால் சர்ச்சை