சுத்தமான தண்ணீா் கேட்டதற்காக அப்பாவி மக்களை கொலை செய்த இராணுவம் சிறையில்..! மஹிந்த எப்படி வெளியில்..?

ஆசிரியர் - Editor I
சுத்தமான தண்ணீா் கேட்டதற்காக அப்பாவி மக்களை கொலை செய்த இராணுவம் சிறையில்..! மஹிந்த எப்படி வெளியில்..?

சுத்தமான குடிநீா் கேட்டதற்காக துப்பாக்கி சூடு நடாத்தி அப்பாவி மக்களையும், குழ ந்தைகளையும் கொலை செய்த படையினா் சிறையில் உள்ளனா். ஆனால் சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிட்ட மஹிந்த எப்படி வெளியில் இருக்கிறாா்?

திவுலபிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.ரத்துபஸ்வலவில் சுத்தமான குடிநீரைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட குழந்தைகள் 

உட்பட அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய படையினர் சிறையில் இருக்க அந்த சம்பவத்திற்கு காரணமான ராஜபக்ஷ சுதந்திரமாக நடமாடித்திரிவதாக சரத் பொன்சேகா குற்றம் சாட்டினார். அத்தோடு சேமலாப நிதியைக் 

கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சுட்டுக் கொன்ற விசேட அதிரடி படையினர் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ராஜபக்ஷ தொடர்ந்து ஆட்சியில் நீடித்தார் என்றும் சாடினார். இதேவேளை சிலாபத்தில் எரிபொருள் 

மானியம்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களும் தற்போது சிறையில் இருக்க மஹிந்த ராஜபக்ஷ சுதந்திரமாக நடமாடி திரிகின்றார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் அமையப்போக்கும் ஆகிக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியில் இந்த நிலைமைகள் அனைத்தும் மாற்றப்படும் என்றும் முப்படைகள் மக்களை நோக்கி துப்பாக்கிகளை காட்ட பயன்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் 

சரத் பொன்சேகா உறுதியளித்தார்.மேலும் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கவே முப்படையினர் செயற்படுவார்கள், எமது ஆட்சியில் ஒரு வலுவான நாட்டை உருவாக்கி பாதுகாப்பை உறுதி செய்வோம் என கூறினார்.

இதேவேளை புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தான் ஆட்சிக்கு வந்தால் பாதுகாப்பு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிப்பேன் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு