வவுனியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வெடிகுண்டு பீதி..! இறுதியில் புஸ்வானமானது..

ஆசிரியர் - Editor I
வவுனியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வெடிகுண்டு பீதி..! இறுதியில் புஸ்வானமானது..

வவுனியா- குருமன்காடு பகுதியில் வீதியின் ஓரத்தில் வீசப்பட்ட பொதியினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் பொலிஸாா் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனா். 

இன்று இரவு 7.30 மணியளவில் குருமன்காட்டுச் சந்தியில் நிறுத்தபட்டிருந்த கயஸ் ரக வாகனத்தில் பயணித்த சிலர் மர்ம பொதி ஒன்றினை வீதி ஓரத்தில் வைத்து விட்டு சென்றுள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதியில் நின்றிருந்த பொதுமகன் அவசர பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிசார் குறித்த பொதியினை சோதனை செய்து பார்த்தபோது அதனுள் கழிவுப்பொருட்கள் இருந்துள்ளன. 

சம்பவம் தொடர்பாக அருகில் இருந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவை பார்வையிட்டபோது கயஸ் வாகனத்தில் வந்தவர்கள் அந்த பொதியினை வீதி ஓரத்தில் போட்டுவிட்டு சென்றதை அவதானித்ததுடன், வாகன இலக்கங்களையும் பதிவு செய்துவிட்டு சென்றனர்.

இதனால் குறித்த பகுதியில் சற்று நேரம் குழப்பமான சூழல் ஏற்பட்டிருந்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு