இளைய தளபதி வீட்டில் குண்டு வைத்துள்ளேன் இன்னும் சில நிமிடங்களில் வெடித்து சிதறும்..! தொலைபேசி அழைப்பால் பதற்றம்.

ஆசிரியர் - Editor
இளைய தளபதி வீட்டில் குண்டு வைத்துள்ளேன் இன்னும் சில நிமிடங்களில் வெடித்து சிதறும்..! தொலைபேசி அழைப்பால் பதற்றம்.

இளைய தளபதி விஜய் வீட்டில் குண்டு வைத்துள்ளதாகவும் அது இன்னும் சில நிமிடங் களில் வெடித்து சிதறவுள்ளதாகவும் வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பினால் விஜய்க்கு சொந்தமான வீடுகள், திருமண மண்டபங்கள் சோதனையிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லையென்றும் அது வெறும் புரளி என்பதும் தெரியவந்தது. அத்தோடு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் போதையில் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

பிகில் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

மேலும் பொலிஸார் நடத்திய தேடுதலில், போரூர் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞரே இவ்வாறு மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், குறித்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Radio
×