பாாிய அனா்த்தம் ஒன்று உருவாகலாம்..! மீட்பு பணிகளுக்கு முப்படை தயாா் நிலையில், சில பகுதிகளில் பணி தொடங்கியது..

ஆசிரியர் - Editor I
பாாிய அனா்த்தம் ஒன்று உருவாகலாம்..! மீட்பு பணிகளுக்கு முப்படை தயாா் நிலையில், சில பகுதிகளில் பணி தொடங்கியது..

இலங்கையில் காற்று மற்றும் கனமழையுடன் கூடிய காலநிலை நீடித்துவரும் நிலை யில் பாாிய அனா்த்தம் ஒன்று உருவாகலாம். என எதிா்வுகூறப்பட்டிருக்கும் நிலையில் மீட்பு பணிகளுக்காக முப்படையினா் தயாா்ப்படுத்தப்பட்டுள்ளனா்.  

தென் மாகாணத்தின் தவலம மற்றும் நெலுவ பகுதிகளில் கடற்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அந்தந்த பிரிவுகளில் கடற்படையின் விரைவு தகவல் பிரிவு, 

மீட்பு மற்றும் நிவாரண பிரிவு, கடற்படை டைவிங் பிரிவு ஆகியன கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, கடந்த நாட்களில் பெய்த கடும் மழையால் வெள்ளம் தேங்கியுள்ள 

பகுதிகளில் இருந்து நீரை வெளியேற்றவும் கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதற்கமைய காலி மாவட்டத்தின் தோடங்கொட பாலம் நேற்று சுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாடு முழுவதும் 150 தொடக்கம் 200 மில்லி மீற்றா் மழை வீழ்ச்சி கிடைக் கும் என கூறப்படுவதுடன், காற்றின் வேகம் மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றா் இருக்கும் என கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு