5 கட்சிகளின் 13 அம்ச கோாிக்கையை நிராகாித்துவிட்டேன்..! பேசி பயனில்லை. யாழில் கோட்டா திட்டவட்டம்..

ஆசிரியர் - Editor I
5 கட்சிகளின் 13 அம்ச கோாிக்கையை நிராகாித்துவிட்டேன்..! பேசி பயனில்லை. யாழில் கோட்டா திட்டவட்டம்..

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடு தலை செய்வேன். என கூறியிருக்கும் ஜனாதிபதி வேட்பாளா் கோட்டா, 5 தமிழ்கட்சி களின் 13 அம்ச கோாிக்கையை ஏற்கமாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளாா்.

இன்று யாழ்.மாவட்டத்திற்கு தோ்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக வருகைதந்த ஜனாதிபதி வேட்பாளா் கோட்டா நல்லை ஆதீன முதல்வரை சந்தித்து கலந்துரையா டினாா். இந்த கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடா்பில், 

கலந்துரையாடலின் நிறைவில் நல்லை ஆதீன முதல்வா் ஊடகங்களுக்கு கருத்துத் தொிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், குறிப்பிட்டிருந்ததாவது, 

நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனாவின் சார்பாக களமிறங்கியுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய வெற்றியடைந்தால் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து 

தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதாக என்னிடம் உறுதியளித்துள்ளார்.குறிப்பாக அரசியல் கைதிகளை சட்ட ரீதியாக விடுவிக்க முடியும் அதன் ஊடாக அவர்களை விடுவிப்போம் என்று கூறியுள்ளார்.

மேலும் வடக்கில் அபிவிருத்திகள் ஊடாக வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும்.குறிப்பாக புதிய பாரிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அதிகளவான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும்.

வேலைவாய்ப்புக்கள் இல்லாமையினால் தான்  வடக்கில் உள்ள இளைஞர்கள் குழம்புகின்றனர்.வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் ஊடாக இனப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்பதை சுட்டிக் காட்டினார்.

அத்துடன் 5 தமிழ் தேசியக் கடசிகளின் 13 அம்சத் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் என்னிடம் கூறினார். அப்போது நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து பேச வேண்டும் என்பதை கோரினேன் 

அத்துடன் இது தமிழ் மக்களின் விருப்பமும் அதுவாகவே இருக்கின்றது. மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர் என்று நான் கூறியிருந்தேன் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு