கோட்டாவுக்கு பதிலிருக்கிறது..! நேரம் வரட்டும்..
பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாயவின் தோ்தல் வி ஞ்ஞாபனம் தொடா்பாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். அது தொடா்பாக எமது நிலைப்பாட்டை அறிக்கையாக சமா்பிக்கவுள்ளோம்.
என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.கோத்த பாய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப் பாட்டை வினவியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.
கடந்த வௌ்ளிக்கிழமை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட கோத்தபாய ராஜபக்ஷ பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்து புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதாக தெரிவித்திருந்தார்.
அத்துடன் நாட்டின் ஒற்றையாட்சி முறை மற்றும் பௌத்த மதத்திற்கான முன்னுரிமை என்பன தொடர்ந்து முன்னெடுக்கப்படும். புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி, பௌத்த மதத்திற்கான முன்னுரிமை,
மத சுதந்திரம் அடிப்படை மனித உரிமை ஆகியவை அரசியலமைப்பின் முக்கிய பகு திகளாக இருக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை, கலப்பு தேர்தல் முறை, மாகாணசபை முறைமை மற்றும் சட்டத்தின் ஆட்சிப்படுத்தல்
என்பன தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்று கோத்தபாயவின் தேர்தல் விஞ் ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கேசரிக்கு
குறிப்பிடுகையில்,சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத் தபாய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை நாங்கள் ஆராய்ந்திருக்கின்றோம். அது தொடர்பான எமது நிலைப்பாட்டை உள்ளடக்கிய
விரிவான அறிக்கையை விரைவில் வெ ளியிடுவோம். அதில் அனைத்து விடயங்க ளுக்கு பதில்கள் இருக்கும் என்றார். பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாப னத்தில் இனப்பிரச்சினை தீர்வு குறித்த விடயங்கள்
எவ்வாறு உள்ளன என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சம்பந்தன் அனைத்து விடயங்கள் குறித்தும் எமது அறிக்கையில் தெளிவாக பதிலளிப்போம் என்றார்.