SuperTopAds

உயிருக்கு போராடும் சுா்ஜித்திற்காக யாழ்ப்பாணம்- வலிகிழக்கில் விசேட பிராா்த்தனை..!

ஆசிரியர் - Editor I
உயிருக்கு போராடும் சுா்ஜித்திற்காக யாழ்ப்பாணம்- வலிகிழக்கில் விசேட பிராா்த்தனை..!

தமிழகம்- திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீளவேண்டும் என யாழ்பாணம்- வலிகாமம் கிழக்கில் இன்று காலை விசேட பிராா் த்தனை நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது. 

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை உள்ளூராட்சி மன்ற தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு கோப்பாய் கண்ணகை அம்மன் சனசமூக நிலையத்தில் 

இந்த பிரார்த்தனை இடம்பெற்றது.உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம அமைப்புக்களின் தலைவர்கள், சனசமூக நிலையத்தலைவர்கள், ஸ்டார் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் என பலரும் ஒன்று கூடி, 

ஆள்கிணற்றுக்குள் சிக்கியுள்ள சிறுவன் சுஜித் நலமுடன் மீட்கப்படவேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து மௌனப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இப்பிரார்த்தனையில் மனித நேயக்கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. 

இதில் கருத்துரைத்த வலிகாமம் கிழக்குப் பிதேச சபைத் தவிசாளர், ஒரு சிறுவன் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறான். அச்சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இந்த உலகில் வாழவேண்டும். 

அதற்காக இலங்கையில் இருந்துகொண்டு எமது வேண்டுதல்களை வெளிப்படுத்தி நிற்கின்றோம் என தெரிவித்தார்.