முல்லைத்தீவு- சுதந்திரபுரத்தில் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் அகழ்வுகள் தொடரும்..!

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு- சுதந்திரபுரத்தில் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் அகழ்வுகள் தொடரும்..!

முல்லைத்தீவு- சுதந்திரபுரம் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் தொடா்ந்தும் அகழ்வுகளை நடாத்துவதற்கு தீா்மானிக்கப்பட்டிருப்பதாக முல்லைத்தீ வு மாவட்ட சட்டவைத்திய அதிகாாி கூறியுள்ளாா். 

கடந்த 2019.10.20 ஆம் திகதி தோட்ட காணியினை துப்பரவு செய்த போது மனித எச்சங்கள் காணப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.அதனை அடுத்து குறித்த பகுதி 

புதுக்குடியிருப்பு பொலிசாரினால் குற்றப் பிரதேசமாக பிரகடனப் படுத்தப்பட்டு அதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் குறித்த பகுதியில் அகழ்வாய்வுகள் செய்வதற்கான அனுமதி கோரப்பட்டு இருந்தது. 

அதற்கமைவாக இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற அனுமதியோடு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் அகழ்வு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதன்போது குறித்த இடத்திலிருந்து வெட்டிக் கொண்டு வரப்பட்ட மண் கொட்டப்பட்ட இடத்திலும் மண்வெட்டிய இடத்திலும் மேலோட்டமாக காணப்பட்ட மனித பாகங்கள் இன்று எடுக்கப்பட்டுள்ள தோடு மிகுதி பகுதியிலும் 

நீதிமன்ற அனுமதியோடு மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. குறிப்பாக குறித்த பகுதியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட மண் கொட்டப்பட்டிருக்கி ன்ற பகுதியில் உள்ள மனித எச்சங்கள் விலங்குகள் மற்றும் 

மழை நீரினால் அடித்துச் செல்லப்படும் அபாயம் இருந்ததன் காரணமாக உடனடியாக குறித்த மனித எச்சங்கள் இன்று எடுக்கப்பட்டதோடு, மேலதிகமாக அகழ்வு பணிகள் நீதிமன்ற அனுமதியோடு செய்வதற்காகவிருப்பதாக 

முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தார்.அத்தோடு குறித்த பகுதியில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் தொடர்பாக நீதிமன்றமே குறிப்பிடும் எனவும், குறிப்பாக இன்றைய தினம் பணியின் போது 

மேலோட்டமாக காணப்பட்ட உடற்பாகங்கள் எடுக்கப்பட்ட நிலையில் நாளைய தினம் குறித்த பகுதியில் கொட்டப்பட்ட மண் மற்றும் உரிய இடங்களில் முற்றுமுழுதான தேடுதலின் ஊடாக மனித பாகங்கள் அனைத்தும் 

சேகரிக்கப்பட்டவுள்ளதோடு அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் அறியமுடிகின்றது.குறித்த இடத்தில் நீதிமன்ற தரப்பினரும் பொலிசார், விசேட அதிரடிப்படையினர், 

சட்ட வைத்திய அதிகாரி மற்றும் காணாமல்போனோர் அலுவலக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.குறித்த பகுதியில் உள்ள தடயங்களின் அடிப்படையில் இருபது வயதுக்கு மேற்பட்ட 

ஆண் ஒருவரின் உடற்பாகங்கள் இருப்பது கண்டறியக்கூடியதாக உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு