யாழ்.பல்கலைகழக 34வது பட்டமளிப்பின் 2ம் பகுதி மாா்கழி மாதம்..! விபரங்கள் வெளியானது.

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக 34வது பட்டமளிப்பின் 2ம் பகுதி மாா்கழி மாதம்..! விபரங்கள் வெளியானது.

யாழ்.பல்கலைக்கழகத்தின் 34வது பொது பட்டமளிப்பு விழாவின் 2ம் பகுதி எதிா்வரும் டிசம்பா் மாதம் 6ம், 7ம் திகதிகளில் நடாத்துவதற்கு தீா்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பொதுப் பட்டமளிப்பு விழாவில் 1,756 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்படவிருக்கின்றன. 

இரு தினங்களும் நாளொன்றுக்கு ஐந்து அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில் 3 கலாநிதிப் பட்டங்கள், 

19 முது தத்துவமாணி, 36 முதுகலைமாணி ஆகிய பட்டப்பின் தகைமைகள் உட்பட 1,358 பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்படவிருப்பதுடன் 

348 வெளிவாரிப்பட்டதாரிகளின் பட்டங்கள் உறுதிப்படுத்தப்படவுள்ளன. உயர் பட்டப் படிப்புகள் பீடம், வணிக முகாமைத்துவ பீடம், கலைப்பீடம், 

விஞ்ஞான பீடம், மருத்துவ பீடம், ஆகிய பீடங்களைச் சேர்நத உள்வாரிப் பட்டதாரிகளினதும், 

திறங்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தைச் சேர்ந்த வெளிவாரிப் பட்டதாரிகளினதும் முழுமையான விபரங்கள் வருமாறு 

உள்வாரி : 

கலாநிதி – 03

முது தத்துவமாணி – 19

முது கலைமாணி (தமிழ்) – 36

தொழில் நிருவாகமாணி – 324

வணிகமாணி – 46

சட்டமணி – 52

வைத்திய சத்திர சிகிச்சைமாணி – 126

தாதியியல் ஃ மருந்தகவியல் ஃ மருத்துவ ஆய்வுகூடவியல் விஞ்ஞானமாணி – 43  

விஞ்ஞானமாணி ( பொது மற்றும் சிறப்பு ) – 156

கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி – 20

கணினி விஞ்ஞானமாணி – 01

கலைமாணி ( பொது மற்றும் சிறப்பு )  – 364

நுண் கலைமாணி ( வாய்ப்பாட்டு, நடனம், சித்திரமும் வடிவமைப்பும் )  – 168

வெளிவாரி : 

கலைமாணி – 256

வணிகமாணி – 40

நுண் கலைமாணி ( வாய்ப்பாட்டு ) – 01

நுண் கலைமாணி ( நடனம் ) – 03

தொழில் முகாமைத்துவமாணி – 48

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு