பேருந்து ஓடிக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்த சாரதி..! மயிாிழையில் தப்பிய பயணிகள். கிளிநொச்சியில் சம்பம்..
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற இ.போ.ச பேருந்து சாரதி பேருந்து ஓடிக் கொண்டிருக்கும்போதே திடீரென மயங்கி விழுந்த நிலையில் பயணிகள் மற்றும் நடத்துனாின் சாதுாியத்தால் பாாிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியில் பயணித்துக் கொண்டிருந்தது போது சாரதிக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நடத்துனரை இரண்டு முறை அழைத்துள்ளார்.
எனினும் நடத்துனருக்கு சத்தம் கேட்காத நிலையில் பேருந்தில் இருந்த பயணி ஒருவரை சாரதி அழைத்துள்ளார். நடத்துனரிடம் தகவல் செல்வதற்கு முன்னர், பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த சாரதி
“அண்ணா...” என கூறிக் கொண்டே திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதன் போது பேருந்தில் இருந்த பயணி ஒருவர் யாராவது பேருந்தை நிறுத்துங்கள் என கூச்சலிட்டுள்ளார். உடனடியாக சில பயணிகள் இணைந்து
ஓடிக் கொண்டிருந்த பேருந்தை நிறுத்தியுள்ளனர். பேருந்தை யாராவது நிறுத்தவில்லை என்றால் அதில் பயணித்த அனைவருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என சம்பவத்தின் போது பேருந்தில் பயணி ஒருவர்
பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். மயங்கி விழுந்த சாரதியை, பயணிகள் இணைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.