பயங்கரவாதி சஹரான் ஹாசீமின் கடவுளும், தந்தையும் கோட்டாபாய ராஜபக்சவே. சாட்சிகள், ஆதாரங்களுடன் நிரூபனமான உண்மை..!
உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் சூத்திரதாாி சஹரான் ஹாசீமை வளா்த்தது முன்னாள் பாதுகாப்பு செய லாளா் கோட்டா என்பது சாட்சிகள், ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாக பிரதமா் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளாா்.
அலரிமாளிகையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்களுக்கு இடையிலான உள்ளக சந்திப்பின்போதே பிரதமர் இந்த விடயத்தை முன்வைத்துள்ளார்.இந்த சந்திப்பில் கருத்து வெளியிட்டிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
2019 ஏப்ரல் 21ஆம் திகதியான உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி அப்பாலி மக்கள் 300 பேரை படுகொலை செய்த சஹரான் ஹாஷிமின் கடவுள் தந்தை
கோட்டாபய ராஜபக்சவே என்பது தற்போது அனைத்துவித ஆதாரங்களுக்கு மத்தியிலும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுகுறித்து மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.அத்தோடு இதுகுறித்து மக்களையும் நாங்கள் தெளிவுபடுத்தவும் வேண்டும்.
சஹரான் ஹாஷிம் என்கிற தீவிரவாதிக்கு கொழும்பில் அலுவலகம் ஒன்றை வழங்கி சம்பளம் என்ற வகையில் அவரது கைகளுக்குப் பணமும் பெற்றுக்கொடுத்து அவருக்கு ஊக்கமளித்தது கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்சவே என்பதை
இவர்களுடைய ஊடகப் பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல நாட்டிற்கு முன்பாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதுகுறித்த அனைத்து தகவல்களும் வெகுசன ஊடகங்கள் மூலமாக அம்பலமாகின. இன்னும் என்னத்தைச் சொல்ல என்று பிரதமர் கூறியிருக்கின்றார்.