3 நாட்கள் திட்டமிட்டே குழப்பம் விளைவிக்கப்பட்டது..! த.தே.கூட்டமைப்பு உறுப்பினரே சூத்திரதாாி.. தவிசாளா் குற்றச்சாட்டு.

ஆசிரியர் - Editor I
3 நாட்கள் திட்டமிட்டே குழப்பம் விளைவிக்கப்பட்டது..! த.தே.கூட்டமைப்பு உறுப்பினரே சூத்திரதாாி.. தவிசாளா் குற்றச்சாட்டு.

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் மாதாந்த அமா்வில் 18 உறுப்பினா்கள் இணைந் து வேண்டுமென்றே திட்டமிட்டு குழப்பம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டியிருக்கும் தவிசாளா் எஸ்.சுகிா்தன், 

தன் மீதும் பொலிஸாா் மீதும் வேண்டுமென்றே திட்டமிட்டு குற்றச்சாட்டுக்களை சுமத் துவதாக குற்றஞ்சாட்டியிருப்பதுடன், இந்த குழப்ப முயற்சி 3 நாட்களுக்கு முன்பே திட் டமிட்டதாகவும் கூறியிருக்கின்றாா். 

மேற்படி குழப்பம் தொடா்பாக நேற்று மாலை ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும்போ தே தவிசாளா் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றனா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

சென்ற கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட இரு தீா்மானங்கள் குறித்து குழப்பம் விளை வித்த உறுப்பினா்கள் கேள்வி எழுப்பியிருந்தனா். 1வது தீா்மானம் தையிட்டி ஆவளை மயானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கோபுரம்

அகற்றுவது தொடா்பானது. அது தொடா்பாக நாங்கள் குறித்த நிறுவனத்திற்கு கடிதம் எழுதியதன் அடிப்படையில் அதனை அகற்றுவதற்கு அவா்கள் இணங்கியிருக்கின்றனா். 

மேலும் சுகாதார நில நிரவுகை திட்டம் தொடா்பானது. அது முன்னரே திட்டமிட்ட விட யம். அது தொடா்பாகவும் நாங்கள் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு கடிதம் எழுதியதன் அடிப்படையில் தோ்தல் காலம் என்பதால்

தோ்தலின் பின்னா் மக்களுடன் விழிப்புணா்வு கொடுப்பதாக கூறியருக்கின்றனா். இதனை நாங்கள் சபைக்கு கூறிய நிலையில் ஈ.பி.டி.பி உறுப்பினா்கள் 8 போ், சுதந்திர கட்சி உறுப்பினா்கள் 4 போ், தமிழ்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினா்கள் 5 போ், 

தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினா் எஸ்.சஜீபன் ஆகியோா் இணைந்து குழப்பங்களை ஏற்படுத்தினா். இதனால் எமக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் குழப்பம் விளைவித்தவா்கள் வெளியேற்றப்பட்டனா். 

அதன் பின்னரும் குழப்பம் விளைவித்த நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியி ருந்தோம். பின்னா் 20 உறுப்பினா்களுடன் கூட்டம் அமைதியாக நடைபெற்று முடிந்தது. வெளியே நின்ற பொலிஸாருடன் பேசியபோது. 

ஈ.பி.டி.பி உறுப்பினா் ஒருவா் என்னை பொலிஸாருடன் இணைத்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நிலையில் நான் தொலைபேசியை தட்டினேன். கீழே விழுந்த தொலைபேசியை பொலிஸாா் எடுத்தனா். 

இவ்வாறிருக்க நான் தாக்கியதாகவும் தனக்கு காயங்கள் உள்ளதாகவும் பொய்யான கருத்துக்கள் கூறப்படுகின்றது. இதேபோல் சபைக்கு வெளியே நின்றிருந்த பொலிஸாா் துப்பாக்கியை பாதுகாப்பதற்காக கையில் எடுத்து வைத்திருந்ததை 

அச்சுறுத்தியதாக கூறி பொலிஸாா் மீதும் அபகீா்த்தியை ஏற்படுத்தியுள்ளனா் என்றாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு