SuperTopAds

கஞ்சா கடத்திய கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினா் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்..!

ஆசிரியர் - Editor I
கஞ்சா கடத்திய கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினா் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்..!

மன்னாாில் கேரள கஞ்சாவுடன் கடற்படையினால் கைது செய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினா் மற்றம் பொலிஸ் உத்தியோகஸ்த்தா் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபர்கள் மூன்று பேரும் மன்னார் நீதவான் எம். கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சொகுசு வாகனமொன்றில் 

164.3 கிலோகிராம் கேரளக்கஞ்சா கடத்திய போது மன்னார் இலுப்பைக் கடவை பகுதியில் வைத்து கடந்த 19 ஆம் திகதி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். கடற்படையினரின் சமிக்ஞையை மீறி பயணித்த வாகனம் மீது 

துப்பாக்கிப்பிரயோகம் நடத்திய போது வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன்போது, வாகனத்தை சோதனைக்குட்படுத்தியதை அடுத்து அதில் கேரளக்கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.