SuperTopAds

கடல் மற்றும் வீதியை கூட விட்டுவைக்காத வனவள திணைக்களம்..! பூநகாில் வனவள திணைக்களம் அடாவடி..

ஆசிரியர் - Editor I
கடல் மற்றும் வீதியை கூட விட்டுவைக்காத வனவள திணைக்களம்..! பூநகாில் வனவள திணைக்களம் அடாவடி..

யாழ்ப்பாணம்- மன்னாா் வீதியில் கேரதீவு- சங்குப்பிட்டி பகுதியில் பிரதான வீதி மற்று ம் கடற்பகுதியை வன பகுதியாக அறிவித்துள்ளமை தொடா்பாக பொதுமக்கள் கடும் விமா்சனம் தொிவித்திருக்கின்றனா். 

காடு மற்றும் அதிக மரங்கள் வளர்ந்த பகுதிகளை இதுவரை அபகரித்து வந்த வனவளத் திணைக்களத்தினர் தற்போது ஆள் உயர கண்டல் மரங்கள் ஆங்காங்கே காணப்படும் வீதியும் கடற்றொழிலாளர் 

மற்றும் உப்பு உற்பத்தி நிறுவனங்களின் பயன் பாட்டிற்கு ஏதுவான பிரதேசமாகவும் விளங்கும் கேரதீவு சங்குப்பிட்டியினையும் அபகரித்துள்ளதாக மீனவா்கள் குற்றம் சுமத்துகின்றனர். கடல் பகுதியானால் 

அது கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தின் கீழேயே காணப்படும். ஆனால் பூநகரியில் மண்ணித்தலைக்கு திரும்பும் இடங்களை அண்டிய பகுதிகள், கௌதாரிமுனை எனப் பல இடங்களில் 

தற்போது வனவளத் திணைக்களத்தினர் எல்லைக் கற்களை நட்டு வருகின்றனர். இதனால் இப் பகுதியில் தொழிலில் ஈடுபட முனையும் மீனவர்கள் அல்லது தொரிலாளர்கள் எதிர்காலத்தில் வனவளத் திணைக்களத்மிடமும் 

அனுமதிக்காக காத்திருக்கும் நிலமை ஏற்படும். குறித்த பகுதியில் கடல்மட்டுமே காணப்படும் சூழலில் வனப்பகுதி இல்லாதபோதிலும் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்படும் மர்மத்தினை புரிந்துகொள்ள முடியவில்லை. 

இவ்வாறு எல்லைக் கற்கள் நாட்படும் பகுதிகளிற்குள் அரச காணிகள் மட்டுமன்றி தனியார் வாழ்விடம், வயல்ப் பரதேசங்கள், மீனவர் இறங்குதுறை ஆகியவற்றுடன் சுடலையும் தப்பவில்லை.

இதனால் எமது பிரதேசத்தின் பெரும் பகுதியை இழக்கும் அவலம் காணப்படுகின்றது. இது தொடர்பில் பிரதேச செயலாளரின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம் . இருப்பினும் அந்த கற்கள் எவையும் அகற்றப்படவில்லை. 

எனச் சுட்டிக்காட்டுவது தொடர்பில் பூநகரிப் பிரதேச செயலாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த விடயம் எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட உடனடியாகவே தனியார் நிலங்கள், 

மீனவ இறங்குதுறை, சுடலை என்பனவற்றை அடையாளமிட்டு வனவளத் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இவற்றினை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதாக நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றனர்.

எனப் பதிலளித்தார். குறித்த விடயம் தொடர்பில் வனவளத் திணைக்கள அதிகாரிகளிடம் வினாவியபோது, பிரதேச செயலாளர் குறிப்பிடும் இடுகாடு அங்கே இடுகாடாக கானப்படவில்லை எனவும் 

அவ்வாறே இடுகாடாக காணப்பட்டால் அதனை இடுகாடாக பயன்படுத்தவோ அதேபோன்று ஏற்கனவே மக்களின் பயன்பாட்டில் உள்ள நிலங்களை இப் பகுதிகளிற்குள் உள்ளடக்கப்பட மாட்டாது. எனப் பதிலளித்தனர்.