பண முதலைகளால் சுரண்டி தின்னப்படும் கௌதாாிமுனை..! நோில் சென்று பாா்வையிட்டாா் நா.உ சிறீதரன்..
கிளிநொச்சி- கௌதாாிமுனை பகுதியில் தொடா்ச்சியாக இடம்பெற்றுவரும் மணல் அகழ்வுகளை நிறுத்துமாறு மக்கள் கோாிக்கை விடுத்துவரும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் குறித்த பகுதிக்கு சென்று நிலமைகளை பாா்த்துள்ளாா்.
கௌதாரி முனை அதிக மண் வளம் நிறைந்ததாகவும் பூர்வீக கிராமமாக 3000 வருடங்களாக மக்கள் வாழ்ந்து வரும் இடமாக திகழ்கின்றது. பூர்வீக ஆலயமாக இருக்கும் மண்ணித்தலை சிவன் ஆலயம் இக் கிராமத்தில் இருக்கின்றது.
தற்போது இங்கே 135 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இக் கிராமத்தில் இருக்கும் வளங்களை அபகரிக்கும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதோடு மக்களுக்கு அற்ப ஆசைகளை காட்டி மக்களை திசை திருப்பி
அவ்விடங்களை அபகரிக்க பலர் முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில் நாடாளு மன்ற உறுப்பினா் நோில் சென்று பாா்வையிட்டுள்ளதுடன், மக்களுடனும் கலந்துரை யாடி வள சுரண்டலை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளாா்.