நீராவியடி பிள்ளையாா் ஆலய விவகாரம். ஞானசார தேரா் உள்ளிட்ட 3 பேருக்கு அழைப்பாணை..! எம்.ஏ.சுமந்திரன் அதிரடி..
முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளை அவமதிப்பு வழக்கை விசாாிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியிருக்கின்றது.
நீராவியடி பிள்ளையாா் ஆலய வளாகத்தில் பிக்குவின் உடலை தகனம் செய்யகூடாது என கூறி முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருந்தது.
இதனை மீறி ஞானசார தேரா் உள்ளிட்டோா் பிக்குவின் உடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்திருந்தனா்.
இதனை எதிா்த்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாடாளுமன்ற உறுப்பினா், ஜனாதிபதி சட்டத்தரணி
எம்.ஏ.சுமந்திரன் இன்று வழக்கு தாக்கல் செய்திருந்தாா். இதன்போது வழக்கு விசாாிக்க தகுந்தது என கூறியிருக்கும் நீதிமன்றம்,
ஞானசார தேரா் உள்ளிட்ட 3 எதிா்மனுதாரா்களை நீதிமன்றில் தோன்றுமாறு அறிவித்தல் அனுப்புமாறும்,
மீண்டும் வழக்கு எதிா்வரும் நவம்பா் மாதம் 8ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் கட்டளை பிறப்பித்துள்ளது.
மனுதாரா் நாடாளுமன்ற உறுப்பினா் சாந்தி சிறிஸ்கந்தராசா சாா்பில் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்,
மற்றும் சட்டத்தரணி கே.சயந்தன் ஆகியோா் ஆஜராகினா்.