இதற்கு பகிரங்கமாக ஒப்புக் கொள்ளுங்கள். தோ்தலில் இருந்து விலகிக் கொள்கிறேன்..! சிவாஜிலிங்கம் அதிரடி..
பௌத்த சமயத்திற்கு முதலிடம் என்ற நிபந்தனையில்லாமல் ஒற்றையாட்சி தொடா்பி ல் திறந்த மனதுடன் பேசுவதாக ஜனாதிபதி வேட்பாளா்கள் கூறினால் தோ்தலில் இருந் து விலகிக் கொள்வதாக வேட்பாளா் சிவாஜிலிங்கம் கூறியுள்ளாா்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்துவோம், காணி விடுவிப்பு,
அரசியல் கைதி விடுதலை காணாமலாக்கப்கட்டோர் விடயத்தில் தீர்வு வழங்குவோம்.13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக பொலிஸ்- காணி அதிகாரங்களை முழுமையாக விடுவிக்க ஜனாதிபதி வேட்பாளர் யாரும் தயாரா?
நான் வந்தால் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன். ஒற்றையாட்சியை பௌத்தத்திற்கு முதலிடம் என்ற நிபந்தனையின்றி திறந்த மனதோடு பேச ஆரம்பிப்போமென கூறுங்கள்.
அந்த அறிவிப்பு வெளியாகியவுடன் நான் போட்டியிலிருந்து விலகிக்கொள்கிறேன் என மேலும் தெரிவித்தார்.