SuperTopAds

2009 இறுதிப்போாில் சரணடைந்த 2994 போராளிகள் எங்கே..? வாயை கொடுத்து மாட்டிக்கொண்டாா் கோட்டா..

ஆசிரியர் - Editor I
2009 இறுதிப்போாில் சரணடைந்த 2994 போராளிகள் எங்கே..? வாயை கொடுத்து மாட்டிக்கொண்டாா் கோட்டா..

ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாய ராஜபக்ஸ அண்மையில் நடாத்திய ஊடகவியலாளா் சந்திப்பில் சரணடைந்த விடுதலை புலிகளின் போராளிகள் தொடா்பாக வெளியான தகவலுக்கும், 

புனா்வாழ்வு ஆணையாளா் நாயகம் புனா்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்ட போராளிகள் தொடா்பான தகவல்களுக்கும் இடையில் பாாிய முரண்பாடுகள் காணப்படுவதாக கூறப்படுகின்றது. 

அண்மையில் கோட்டாபாய 13784 போராளிகளுக்கு தாம் புனா்வாழ்வு வழங்கி விடுதலை செய்ததாக கூறியிரக்கி்ன்றாா். ஆனால் புனா்வாழ்வு ஆணையாளா் நாயகம் 10790 போராளிகளுக்கு புனா்வாழ்வு வழங்கியதாக கூறப்படுகின்றது. 

ஆகவே 2994 போராளிகளுக்கு என்ன நடந்தது? அவா்கள் எங்கே? என கேள்விகள் எழுந்துள்ளது.