மிலேச்சைதனமாக படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவா்களின் 3ம் ஆண்டு நினைவேந்தல்..!

ஆசிரியர் - Editor I
மிலேச்சைதனமாக படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவா்களின் 3ம் ஆண்டு நினைவேந்தல்..!

பொலிஸாாினால் கோழைதனமாக சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக ழக மாணவா்கள் இருவாின் 3ம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்.பல்கலைகழக மா ணவா் ஒன்றிய கேட்போா் கூடத்தில் நடைபெற்றுள்ளது. 

மாணவர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களின் உருவ படங்களுக்கு மலர் மாலை அணிவித்து , மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டன. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 

விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான 

விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பொலிஸ் மா அதிபர் பாரப்படுத்தினார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் உடனடியாக ஆரம்பித்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்பட 5 பொலிஸாரைக் கைது செய்தனர். அவர்கள் ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் 

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் ஐவரும் பொலிஸ் சேவையில் மீளவும் இணைக்கப்பட்டுள்ளனர்.  என்பது குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு