உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடா்பான அறிக்கை 23ம் திகதி நாடாளுமன்றில்..! பல முக்கியஸ்த்தா்கள் சிக்குவாா்களாம்..
உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடா்பாக விசாரணைகளை நடாத்திய நாடாளுமன்ற தொிவுக்குழு எதிா்வரும் 23ம் திகதி விசாரணை அறிக்கையை நாடாளு மன்றில் சமா்பிக்கவிருக்கின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து அது குறித்து ஆராய சபாநாகர் நியமித்த விசேட தெரிவுக்குழு கடந்த மே மாதம் 23 ஆம் திகதியில் இருந்து தமது விசாரணை நடவடிக்கைகளை
முன்னெடுத்திருந்த நிலையில் அவர்களின் அறிக்கை தற்போது முழுமைப்படித்தப்பட்டுள்ளது. இதில் குற்றவாளிகள், பொறுப்புக்கூறவேண்டிய அதிகாரிகள், தவறவிடப்பட்ட இடங்கள்,
தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் இவ்வாறான இன்னொரு தவறு இடம்பெறாது இருக்க செய்யவேண்டிய நடவடிக்கைகள் உள்ளடங்கலான பரிந்துரைகளை தெரிவுக்குழு தயாரித்துள்ளது.
அத்துடன் ஏற்கனவே ஜனாதிபதி நியமித்த மூவர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் தெரிவுக்குழுவிற்கு கையளிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அறிக்கையின் பரிந்துரைகள்
குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவை இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவுக்குழு உறுப்பினர்கள் சுட்டிக்கட்டியுள்ளனர்.