கொக்காவில் விபத்தில் முதியவா் உயிாிழந்த சோகம்..! மனதை உருக்கும் சம்பவத்தை முகப்புத்தகத்தில் எழுதிய இளைஞன்..
முல்லைத்தீவு- கொக்காவில் பகுதியில் உழவு இயந்திரத்துடன் மோதி 70 தொடக்கம் 75 வயது மதிக்கத்தக்க முதிய வா் ஒருவா் உயிாிழந்த சம்பவம் இன்று மாலை 6.10 மணியளவில் நடைபெற்றுள்ளது.
விபத்துக்குள்ளாகி மூா்ச்சையடைந்து கிடந்த முதியவரை மீட்ட இளைஞா்கள் சிலா் முதலுவதவி வழங்கியதுடன் அம்புலன்ஸ் வண்டிக்கும் தொியப்படுத்தியிருந்தனா்.
எனினும் வைத்தியசாலைக்கு செல்லும் முன்பே அவா் இறந்துவிட்டாா். இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த இளைஞா் ஒருவா் அந்த சம்பவத்தை தனது முக புத்தகத்தில் இவ்வாறு எழுதியுள்ளாா்.
நடுவீதியில் மோட்டார் வண்டி வீதியின் கரையில் அந்த முதியவர் கண்பகுதியில் இரத்தம் வழிய கிடந்தார். முறிந்திருக்கும் என நினைக்கிறேன்.
வாயை ஆட்டினார் நெஞ்சுப்பகுதி இறுக்கமாக இருந்தது. தண்ணீர் முகத்தில் தெளிச்சும் சற்று நேரத்தில் ஆட்டம் அசைவில்லை அவரது உடல் சில்லென்று குளிர்ந்தது.
அவரது தொலைபேசி மோட்டார் வண்டியின் அருகே கிடந்தது.அவர் இறுதியாக அழைக்கப்பட்டிருந்த சுதா எனும் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டபோது
"எவடத்திலை அப்பா போறியள் என பெண்குரல் துயர மிகுதியால் என் குரல் அமைதியானது சுதாகரித்தவனாக அப்பா கொக்காவிலில் விபத்து மயக்கமாக கிடக்கிறார்
அம்புலன்சுக்கு சொல்லியாச்சு வந்து கொண்டிருக்கு கிளிநொச்சிக்கு வாங்கோ என்று சொன்னேன் நான் இவ்வாறு கூறும் போது அவரது தந்தையின் உயிர் பிரிந்துவிட்டது ஆனால் எவ்வாறு அவரது மகளுக்கு சொல்வது.
மாங்குளத்திலிருந்து வந்த அம்புலன்சில் அவரது உடலை ஏற்றிவிட்டு வந்தேன் வழி நெடுகிலும் துயரம் விபத்துக்களால் நாளாந்தம் பறிக்கப்படும் உயிர்கள் எத்தனை எத்தனை.
வயது போனவர்களை தயவு செய்து இரவுகளில் மோட்டார்வண்டியோ வாகனங்களோ செலுத்த அனுமதிக்காதீர்கள் உறவுகளே.