கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

கிளிநொச்சி- முகமாலையில் கண்ணிவெடியகற்றுவதற்கு நிதி வழங்கும் ஜப்பான்..! இன்று உடன்படிக்கை கைச்சாத்து..

ஆசிரியர் - Editor
கிளிநொச்சி- முகமாலையில் கண்ணிவெடியகற்றுவதற்கு நிதி வழங்கும் ஜப்பான்..! இன்று உடன்படிக்கை கைச்சாத்து..

கிளிநொச்சி- முகமாலை பகுதியில் கண்ணிவெடியகற்றும் மனிதநேய பணிகளுக்கு நிதி வழங்க ஜப்பான் அரசாங்கம் இரு மனிதநேய கண்ணிவெடியகற்றும் நிறுவனங்களுடன் உடன்படிக்கை ஒன்றினை இன்று காலை கைச்சாத்திட்டுள்ளது. 

இன்று காலை முகமாலை குறித்த பகுதிக்கு விஜயம் மெற்கொண்ட ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் தொடா்பில் நேரடியாக பார்வையிட்டார். 

தொடர்ந்து 2020ம் ஆண்டு குறித்த பகுதியில் காணப்படும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை தொடர்வதற்கான நிதியை வழங்குவதற்காக அவர் ஒப்பமிட்டிருந்தமை குறிப்பிடதக்கதாகும். குறித்த விடயம் அடங்கிய ஊடக அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.

Radio
×