கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினா் வசமிருந்த 155.15 ஏக்கா் காணியை மக்களிடம் கையளித்தாா் சவேந்திர சில்வா..!

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினா் வசமிருந்த 155.15 ஏக்கா் காணியை மக்களிடம் கையளித்தாா் சவேந்திர சில்வா..!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினா் வசமிருந்த சுமாா் 150.15 ஏக்கா் நிலம் இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வாவினால் மாவட்ட அரசாங்க அதிபா்களிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. 

இந் நிகழ்வு இன்று கிளிநொச்சி- இரணைமடு இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகளே இவ்வாறு 

இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இன்று கிளிநொச்சி விஜயம் மெற்கொண்டிருந்த இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிதத் காணிகளை உத்தியோகபூர்வமானக அரச அதிகாரிகளிடம் கையளித்தார். 

குறித்த காணிகளை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றம் முல்லைத்தவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ஆகியோர் ஒப்பமிட்டு காணிகளை உத்தியோககர்வவமாக பொறுப்பேற்றனர்.

இந்நிகழ்வில் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரியவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு