தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா..? கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி ரமேஸ் சரணடையவில்லையா..? கோட்டாவுக்கு முகத்தில் அறைந்த பிரதமா் ரணில்..

2009 போாில் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி கேணல் ரமேஸ் உடன் தா ன் அப்போது பேசியதாக கூறிய எஸ்.பி.திஸாநாயக்கவிடம் கோட்டா உண்மையை தொிந்து கொ ள்ளவேண்டும். என பிரதமா் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளாா். 

யாழில் உள்ள விருந்தினர் விடுதி ஓன்றில் நேற்று இரவு வடமாகாண ஊடகவியலாளரை சந்தித்து கலந்துரையாடிய போது, ஊடகவியலாளர் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கோட்டபாய அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போதே 

இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,சென்ற வருடம் எஸ்.பி.திஸாநாயக்கா அவர்கள் கேணல் ரமேஸ் சரணடைந்த வேளை தான் அவருடன் பேசியதாக தெரிவித்திருந்தார். ஆகவே கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் முதலில் எஸ்.பி.திஸாநாயக்காவுடன் பேசி 

அதனை தெரிந்து கொள்ளவேண்டும்.யுத்தம் முடிவடைந்ததாக சொல்லப்பட்ட காலத்திலும், சரண்டைந்ததாக சொல்லப்பட்ட காலத்திலும் பலர் காணாமல் போயுள்ளார்கள். அந்த எண்ணிக்கையை நாம் கண்டு பிடிக்க வேண்டும். 

அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் கண்டு பிடிக்க வேண்டும்.உலகில் போர் நடந்த நாடுகளில் காணாமல் போதல்கள் நடந்துள்ளன. நடக்கின்றன. இங்கும் வடக்கு மற்றும் தெற்கிலும் நடந்துள்ளன. அதில் இருந்து நாம் மீள முடியாது. 

கோட்டபாய ராஜபக்ஸ கொடுத்த எண்ணிக்கைக்கும் உண்மையான எண்ணிக்கைக்கும் இடையில் இடைவெளி இருப்பதையும் நான் அவதானித்துள்ளேன் எனத் தெரிவித்தார்.குறித்த கலந்துரையாடலில் பிரதமருடன் 

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு