கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

யாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி..! வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..

ஆசிரியர் - Editor
யாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் மினி சூறாவளி..! வீடுகள், கோவில்கள் சேதம், ஒருவா் படுகாயம்..

யாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் இன்று காலை 11.30 மணியளவில் மினி சூறாவளி தாக்குதலில் பல வீடுகள் சேதமடைந்ததுடன், கோவில் ஒன்றும் சேதமடைந் திருக்கின்றது. மேலும் ஒருவா் காயமடைந்துள்ளாா். 

மாமுனை நாகதம்பிரான் ஆலய அன்னதான மடம் முற்றுமுழுதாக சேதமடைந்தது. ஆலயப் பிரதம குருக்கள் நாகேந்திர சர்மாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

எனினும், ஆலய அன்னதான மடத்தில் இருந்து 150 மீற்றர் தூரத்தில் இருக்கும் மாமுனை அ.த.க. பாடசாலையில் கல்வி பயின்ற மணவர்கள் மினி சூறாவளியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்கள்.

Radio
×