வடக்கில் 150.15 ஏக்கா் காணி நாளை மக்களிடம் கையளிப்பு..! இராணுவம் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
வடக்கில் 150.15 ஏக்கா் காணி நாளை மக்களிடம் கையளிப்பு..! இராணுவம் அறிவிப்பு..

வடமாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் முப்படையினா் மற்றும் பொலிஸாருடைய கட்டுப்பாட்டில் உள்ள சுமாா் 150.15 ஏக்கா் நிலம் மக்களிடம் மீள கையளிக்கப்படவுள்ளதாக இராணுவ பேச்சாளா் தொிவித்துள்ளாா். 

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பொதுமக்களுக்குச் சொந்தமான 150.15 ஏக்கர் காணிகள் நாளை விடுவிக்கப்படுவதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் வரும் டிசெம்பர் மாதத்துக்கு முன்னர் 

பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அத்துடன், வடக்கு மாகாணத்தில் இராணுவம் வசமுள்ள காணிகளைத் துரிதமாக விடுவிக்க வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், 

இராணுவத்தினருடன் பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு