அரசியல் செல்வாக்கால் தப்பிய ரங்கா..! திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்..

ஆசிரியர் - Editor I
அரசியல் செல்வாக்கால் தப்பிய ரங்கா..! திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு சட்டமா அதிபா் உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், விபத்தினை ஏற்படுத்திவிட்டு அரசியல் செல் வாக்கினால் தப்பித்தமை அம்பலமாகியிருக்கின்றது. 

2016ம் ஆண்டு நடைபெற்ற விபத்து சம்பவத்தில் கொல்லப்பட்ட அதிகாரியே வாகனத்தை ஓட்டிச் சென்றதாக கூறி வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பீ அறிக்கை, அப்போது செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தின் 

பொறுப்பதிகாரியாக இருந்த பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவவின் கையெழுத்தை போலியாக இட்டே தாக்கல் செய்யப்பட்டதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பீ. அறிக்கை வவுனியா பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலத்திலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பொலிஸாருக்கு கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தம் காரணமாக போலியான 

பீ அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு அப்போது பொலிஸ் மா அதிபராக இருந்த மகிந்த பாலசூரிய உட்பட உயர் அதிகாரிகள் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே ஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபா் உத்தரவு பிறப்பித்துள்ளாா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு