யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்திற்கான பாதை அமைப்பதில் இழுபறி..! விமானப்படையே காரணம்..
யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பாதையில் 400 மீற்றா் நீள மான பகுதியை விடுவிக்க விமானப்படையினா் மறுப்பு தொிவிக்கும் நிலையில், 6 மைல் துாரம் பயணித்தே விமான நிலையத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கான பிரதான நுழைவாயிலாக தற்போது கட்டுவன் மயிலிட்டி வீதியே மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும் மக்கள் தெல்லிப்பழை சந்தியின் ஊடாக
கட்டுவன் சந்தியை அடைந்து அதன் மூலம் மயிலிட்டியை நோக்கிப் பயணிப்பதன் மூலம் இலகுவாக விமான நிலையத்தினை அடைய முடியும். இருப்பினும் குறித்த போக்குவரத்திற்கான பாதை முழுமையாக போக்குவரத்திற்காக
வெறும் 6 ஏக்கர் நிலமே தடையாகவுள்ளது. இந்த ஆறு ஏக்கர் நிலத்தை விடுவிக்காத காரணத்தினால் 6 மைல் தூரம் அதிகமாக பயணித்தே தற்போது விமான நிலையத்தினை அடையும் அவலம் கானப்படுகின்றது.
இதன் மூலம் காங்கேசன்துறை வீதியில் காங்கேசன்துறை சந்தியை அடைந்து அதன் பின்னர் பொன்னாலை பருத்தித்துறை வீதிவழியாக மயிலிட்டிச் சந்தியை அடைய வேண்டும். அதன் பின்னர் மயிலிட்டிச் சந்தியில் இருந்து கட்டுவன் சந்திக்கு
சென்றே விமான நிலையத்தினை அடைய வேண்டும். இதனால் பல மைல்கள் பயணம் மேற்கொண்டு விமான நிலையத்தினை அடையும் அவலநிலமையே கருத்தில்கொண்டு விமானப்படையினரின் பிடியில் உள்ள நிலத்தில் இருந்து
சுமார் 6 ஏக்கர் நிலத்தினை விடுவிக்க படைத்தரப்பினர் முன்வர வேண்டும். இதன் மூலம் மிக குறுகிய பயணத்தில் விமான நிலையத்தினை அடையும் வாய்ப்பும் உள்ளது. இதற்காக கட்டுவன் மயிலிட்டி வீதியில் கட்டுவன் சத்தியில் இருந்து
ஒரு கிலோ மீற்றர் வரை தார் படுக்கை வீதி அமைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்த் திசையிலும் கிராமக் கோட்டுச் சந்தியை அண்மித்த தூரம் வரையில் குறித்த வீதி அமைக்கப்பட்டு எஞ்சிய இடைவெளியில் ஆக்கிரமித்துள்ள
வீதியினை திறப்பதற்கு பிரதேச செயலாளர் , சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை , பிரதமர் , விமானப்படையினர் ஆகியோர் ஆக்கபூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் . இவ்வாறு இந்த 6 ஏக்கர் நிலம் விடுவிப்பதன் மூலமே
விமான நிலையத்தின் பயணை மக்கள் நேரடியாக பொற்றுக்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.