மட்டக்குளியில் வதந்தியால் இராணுவம், பொலிஸ் குவிக்கப்பட்டு பதற்றம்..!

ஆசிரியர் - Editor I
மட்டக்குளியில் வதந்தியால் இராணுவம், பொலிஸ் குவிக்கப்பட்டு பதற்றம்..!

கொழும்பு- மட்டக்குளி பகுதியில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமா ன பொதி மீட்கப்பட்டதாகவும், குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாகவும் வெளியான செ ய்திகள் பொய்யானவை என பொலிஸாா் கூறியள்ளனா். 

இனந்தெரியாத சிலர் பரப்பிய வதந்தியே இந்த பதற்ற நிலைக்கு காரணமென தெரிவிக்கும் பொலிஸார், வதந்திகளை நம்பவேண்டாமென மக்களை கேட்டுள்ளனர்.மட்டக்குளி, சென்றல் வீதியிலுள்ள பாடாலையொன்றுக்கு 

அருகிலும் மற்றும் கம்பஹா பகுதியிலும் வெடிகுண்டு புரளி ஒன்று பரவியதால் இன்று காலை குறித்த பகுதிகளில் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனால் பாடசாலை மாணவர்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலையொன்றுக்கு அருகில் காரொன்று நிறுத்தப்பட்டிருந்ததால் அப்பகுதியில் பதற்றநிலையேற்பட்டிருந்தது. இதேவேளை, மட்டக்குளி பகுதியில் அநாதரவாக நிறுத்தப்பட்டிருந்த கார் 

தொடர்பில் பல்‍வேறு வதந்திகள் பரப்பப்பட்டதையடுத்து, அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. இதையடுத்து, அப்பகுதியில் இருந்த பாடசாலைகளின் மாணவர்களை பெற்றோர்கள் பாதுகாப்புக் கருதி அழைத்துச்சென்றுள்ளனர். 

பின்னர் அப்பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு