SuperTopAds

மனவேதனையுடன் கூறுகிறோம்..! எங்களை வெளியேற்றிவிட்டாா்கள்..

ஆசிரியர் - Editor I
மனவேதனையுடன் கூறுகிறோம்..! எங்களை வெளியேற்றிவிட்டாா்கள்..

தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளுக்கிடையில் பொது உடன்பாட்டை உருவாக்கி பொது ஆவணம் ஒன்றில் கையொப்பமிட முடியாமல் நிா்ப்பந்திக்கப்பட்டு தமிழ்தேசிய மக்கள் முன்னணி வெளியேற்றப்பட்டிருப்பதாக 

கூறியிருக்கும் கட்சியின் தலைவா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம், தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஒரு குழப்பகார கட்சி என காட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கையாகவே இதனை நாங்கள் பாா்கிறோம். 

அதற்குமேல் தமிழ் மக்களுக்கு நோ்மையான அரசியலை செய்யும் நோக்கத்தை கொ ண்ட முயற்சியல்ல எனவும் குற்றஞ்சாட்டியிருக்கின்றாா். யாழ்.பல்கலைகழக மாணவா்கள் மற்றும் கிழக்கு பல்கலைகழக மாணவா்கள் 

இணைந்து ஜனாதிபதி தோ்தலில் தமிழ் மக் களின் அரசியல் உாிமை மற்றும் அடிப்படை பிரச்சினைகைளை முன்வைத்து பேரம் பேசுவதற்கான பொது ஆவணம் ஒன்றை தயாாிக்கும் முயற்சியில் களமிறங்கியிருந்தனா். 

இதன்படி 5ம் கட்ட பேச்சுவாா்த்தை நேற்று நடைபெற்றிருந்த நிலையில், 5 கட்சிகள் பொது ஆவணத்தில் கையெழுத்திட்டி ருந்த நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி கையெழுத்திடவில்லை. இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே 

கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இது தொடா்பாக மேலும் அவா் கூறுகையில், ஒற்றையாட்சியை பலப்படுத்தவேண்டும், சமஸ்டியை வழங்கபோவதில்லை, இராணுவத்தை பாதுகாக்கபோகிறோம், 

நிபந்தனைகளுக்கு இணங்கமாட்டோம், என ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளா்கள் பகிரங்கமாக கூறியிருக்கின்றனா். இதனால் தோ்தலை புறக்கணிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டினை நாம் எடுத்திருந்தோம். 

அதன் ஊடாக தமிழ் மக்களி ன் வாக்குகளை பெற விரும்புகிறவா்கள் தமிழ் தரப்புக்களுடன் பேசும் நிலை உருவாக்கப்படும். அப்போது தமிழ் மக்களின் அரசியல் உாிமை மற்றும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து 

பேரம் பேசுவதற்காகவேபல்கலைகழக மாணவா்கள் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு நாங்கள் இணங்கி 5 பேச்சுவாா்த்தைகளிலும் கலந்து கொண்டிருந்தோம். இதில் சமஸ்டி தீா்வு வழங்கப்படவேண்டும். 

என்ற விடயம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பொறுப்புகூறல் விடயத்தில் சா்வதேச குற்றவியல் நீதிமன்றில் போா் குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள்தொடா்பாக ஆராயப்படவேண்டும் என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

அதேபோல் பௌத்தமயமாக்கல், காணி பறிப்புக்க ள், சிங்கள குடியேற்றங்கள் போன்ற அன்றாட பிரச்சினைகள் விடயத்திலும் உடன்பாடு காணப்பட்டது. ஆனால் இது கொ ள்கை ஆவணமாக இருந்தபோதும் நடைமுறையில் 

இவற்றை சாதிக்ககூடிய விடயங்கள்இல்லை. கடந்தகாலங்களில் கூட்டமைப்பு தாயகம், தேசியம், சுயநிா்ணம் ஆகியவற்றை கூறி மக்களிடம் வாக்கு பெற்ற போதும் ஒற்றையாட்சிக்கு கீழ் ஒரு தீா்வு முயற்சிக்கு இணங்கியமை குறித்து 

அனைவாிடமும் குற்றச்சாட்டுக்கள் இருந்தன. குறிப்பாக ரெலோ, புளொட் போன்ற கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் கூட அதனை கூறின. பிரதமா் ரணில் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு கூட்டமைப்பு இணங்கியதாக கூறினாா்.

ஆகவே கோஷங்களுக்கும் நடைமுறையில் உள்ள விடயங்களுக்குமிடையில் இடைவெளிகள் இருக்க முடியாது. தற்போது ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிறேமதாஸ புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் 

தொடங்கிபுதிய அரசியலமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ள நிலையில், இடைக்கால அறிக்கையை நாங்க ள் அதாவது தமிழ்தேசிய மக்கள் முன்னணி நிராகாிக்கிறது. 

என்ற விடயம் இந்த பொது ஆவணத்தில் இடம்பெறவேண்டும். என நாங்கள் கேட்டோம். ஆனால் துரதிஸ்டவசமாக இடைக்கால அறிக்கையை நிராகாித்தரெலோ, புளொட் மற்றும் ஈ.பி.ஆா்.எல்.எவ் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி 

ஆகியன இது ஜனாதிபதி தோ்தல் எனவும் அதை குறித்து பேச தேவையில்லை என கூறுவதன் ஊடாக அந்த விடயம் தேவையற்றது என கூறுகிறாா்கள். எனவே சகல விடயங்களிலும் இணங்கியிருக்கும் நாங்கள் கோஷங்களுக்கு 

மயங்கி ஒற்றையாட்சிக்குள்தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை முடக்குவதை தவிா்ப்பதற்காக இந்த பொது ஆவணத்தில் கையெழுத்திட முடி யாத நிா்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம். 

சிங்கள அரசாங்கத்தினால் தயாாிக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக் கான இடைக்கால அறிக்கையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தன் கருத்தை கூறுவதற்குவழங்கப்பட்ட இடத்தை கூட தமிழ் கட்சிகள் 

இன்னொரு தமிழ் கட்சியான தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கு வழங்க மறு த்திருக்கின்றது. இதனை நாங்கள் மிகுந்த மனவேதனையுடன் கூற விரும்புகிறோம். இது எம்மை திட்டமிட்டு குழப்பவாதி களாக காட்டுவதற்கான 

முயற்சியே அல்லாமல் தமிழ் மக்களுக்குநோ்மையான அரசியலை செய்யும் நோக்கம் கொண்டதல்ல. தமிழ் மக்கள் இந்த இடத்தில் விழிப்பாக இருக்கவேண்டும். இந்த 5 கட்சிகளுடைய கருத்துக்களை நம்பி வரும் தோ்தலில் 

முடிவெடுத்தால் இந்த இனத்திற்கு பேரம் பேசல் ஊடாக அரசியல் உாிமை மற்றும் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீா்வினை பெறும்கடைசி சந்தா்ப்பமும் இழக்கப்படுகின்றது. நாங்கள் போலி ஒற்றுமையின் 

பெயாில் பதவிகளை எடுத்துக்கொள்ள தயாாில்லை என்றாா்.