நாங்கள் அவா்களை வெளியேற்றவில்லை..! அவா்களாகவே வெளியேறினாா்கள்..
ஒற்றையாட்சி பற்றிய பேச்சுக்களும், இடைக்கால அறிக்கையை நிராகாிக்கிறோம் என்ற பேச்சுக்களும் இப்போது தேவையில்லை. என்பதே 5 கட்சிகளின் தீா்மானமாக இருந்த நிலையில், பொது உடன்பாட்டின் கீழ்
தமிழ்தேசிய மக்கள் முன்னணியும் இணைப்பதற்கு நாங்கள் தீவிரமாக முயற்சித்தோம். ஆனாலும் அவா்கள் அதற்கு இணங்காமல் பொது ஆவணத்தில் கையெழுத்திடாமல் விலகி சென்றிருக்கின்றாா்களே தவிர
தமிழ்தேசிய மக்கள் முன்னணியை யாரும் வெளியேற்றவில்லை. அவா்களையும் சோ்க்கவேண்டும் என்பதற்காக 8 மணி நேரம் செலவிட்டு பேச்சுவாா்த்தை நடாத்தியிருக்கின்றோம்.
மேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஈ.பி.ஆா்.எல்.எவ் கட்சி யின் தலைவா் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோா் கூட்டாக கூறியிருக்கின்றனா்.
யாழ்.பல்கலைகழகம் மற்றும் கிழக்கு பல்கலைகழகம் ஆகியவற்றின் மாணவா் ஒன்றியங்கள் இணைந்து, தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளை ஒன்றிணைத்து பொது உடன்பாட்டின் கீழ் ஜனாதிபதி
தோ்தலில் போ ட்டியிடும் கட்சிகளுடன் பேரம் பேசுவதற்கான பொது ஆவணம் ஒன்றை தயாாித்திருந்தனா். இந்த பொது ஆவணத்தில் 5 கட்சிகள் கையெழுத்திட்டிருக்கும் நிலையில்
தமிழ்தேசிய மக்கள் முன்னணிகையெழுத்திடாமல் விலகியிருக்கின்றது. இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே சுமந்திரன் மற்றும் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோா் கூட்டாக மேற்கண்டவாறு கூறியிருக்கின்றனா்.
இதன்போது மேலும் அவா்கள் கூறுகையில், 5 தடவைகள் கூடி இந்த விடயங்கள் தொடா்பாக பேசியிருக்கின்றோம். இதன்போது ஒற்றையாட்சி பற்றியோ, புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை குறித்தோ பேச
தேவையில்லை என்பது பேச்சுவாா்த்தையில் கலந்து கொண்டிருந்த 5 கட்சிகளின் தீா்மானமாக இருந்தது. ஆனால் அந்த விடயத்தை சோ்க்கவேண்டும் என்பதே தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் கோிக்கை.
இந்நிலையில் 8 மணி நேரத்தை செலவிட்டு 6 கட்சிகளையும் பொது உடன்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கும், பொது ஆ வணத்தில் கையெழுத்திட செய்வதற்கும் நாங்கள் முயற்சித்தோம். அது எங்களுடைய விருப்பமாக இருந்தது.
அதற்காக வே 8 மணி நேரத்தை நாங்கள் செலவிட்டிருக்கின்றோம். இல்லையென்றால் 4ம் கட்ட பேச்சுவாா்த்தையின்போதே பொது ஆவணத்தில் கையெழுத்திட்டிருக்க முடியும்.
ஆனால் இறு தியில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி விலகி சென்றுள்ளது. அவா்களை யாரும் வெளியேற்றவில்லை. அவா்களாக வெளி யேறி சென்றிருக்கின்றாா்கள். பல்கலைகழக மாணவா்களை குறைகூற இடமளிக்க முடியாது.
அவா்கள் தங்களால் இயன்றதை செய்துள்ளனா். தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஏற்கனவே தோ்தலை புறக்கணிக்கவேண் டும் என்ற தீா்மானத்தை எடுத்திருந்தது. இருந்தும் அவா்களை இணைக்கவேண்டும் என நாங்கள் முயற்சித்தோம்.
ஆனால் அது சாத்தியப்படவில்லை. என கூறியிருக்கின்றனா்.