கிளிநொச்சியில் ஆயுதங்கள் மீட்பு..! கிளிநொச்சி- வவுனியா மாவட்டங்களுக்கிடையில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பம்..
திருகோணமலையில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியிடமிருந்து பெறப்பட் ட தகவலின் அடிப்படையில் கிளிநொச்சியில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட நிலையில், மீ ண்டும் சோதனை நடவடிக்கைகளை படையினா் ஆரம்பித்துள்ளனா்.
முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவரின் வீட்டிலிருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தன.இதனையடுத்து வவுனியாவில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் தீவிர சோதனைக்கு
உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.வவுனியாவில் இருந்து வடக்கிற்கும், வடக்கில் இருந்து வவுனியா ஊடாக தெற்கிற்கு செல்லும் மக்களிடம் தீவிர சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வவுனியாவில் இதுவரை காணப்பட்ட வீதி
பாதுகாப்பு தடைகளுக்கு மேலதிகமாக மேலும் வீதி தடைகளை ஏற்படுத்தி பொதுமக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.மேலும் ஆயுதங்கள் மறைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்த சோதனை
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.இதேவேளை ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து கோத்தாபய தலைமையிலான குழுவினர் வடபகுதியில் பதற்ற நிலையை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகவும்
அதன் காரணமாக இவ்வாறான ஆயுதங்கள் திடீரென கண்டுபிடிக்கப்படுவதாகவும் தென்னிலங்கை ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.