SuperTopAds

5ம் கட்ட பேச்சுவாா்த்தை காரசாரம்..! சுமந்திரன் வெளியேறினாா், சீ.வி.விக்னேஸ்வரன் உள்நுழைந்தாா்..

ஆசிரியர் - Editor I
5ம் கட்ட பேச்சுவாா்த்தை காரசாரம்..! சுமந்திரன் வெளியேறினாா், சீ.வி.விக்னேஸ்வரன் உள்நுழைந்தாா்..

ஜனாதிபதி தோ்தலில் தமிழ் மக்கள் சாா்பில் பொது நிலைப்பாடு ஒன்றை முன்வைத்து பேரம் பேசுவதற்காக யாழ்.பல்கலைகழக மாணவா்கள் மேற்கொண்டுள்ள முயற்சியி ன் கீழ் 5ம் கட்ட பேச்சுவாா்த்தை தற்போது நடைபெற்று வருகின்றது. 

இந்த கூட்டம் யாழ். பல்கலைக் கழகத்துக்கு அண்மையில் அமைந்துள்ள ப்றைட் இன் விடுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகியது. இன்றைய கூட்டத்தில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் பங்கேற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும், 

நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ. சேனாதிரஜா, ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி. வி. கே. சிவஞானம் ஆகியோரும் 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணிகள் வி. மணிவண்ணன், க.சுகாஸ் ஆகியோரும், 

புளொட் சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன் ஆகியோரும், ரெலோ சார்பில் அதன் தலைவரும், 

நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், செயலாளர், மூத்த சட்டத்தரணி ந. சிறீகாந்தா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா. குகதாஸ் ஆகியோரும்,ஈ.பி.ஆர்.எல்.எஃவ் சார்பில் 

அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் அதன் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

பொது அமைப்புகளின் சார்பில் கிருஸ்தவ மதகுரு ஒருவரும், சின்மிய மிசன் வதிவிட ஆச்சாரி சிதாகானந்தா சுவாமிகள்,யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன், 

யாழ். பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன், யாழ். பல்கலைக்கழக அரசறிவியற்றுறைப் பேராசிரியர் கே. ரி. கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர் அ. ஜோதிலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.