SuperTopAds

72 வருடங்களாக தமிழா்கள் கேட்பதை புாிந்து கொள்ளாதவா்கள் தமிழா்களின் வாக்குகளை எப்படி பெறலாம் என கேட்கிறாா்கள்..!

ஆசிரியர் - Editor I
72 வருடங்களாக தமிழா்கள் கேட்பதை புாிந்து கொள்ளாதவா்கள் தமிழா்களின் வாக்குகளை எப்படி பெறலாம் என கேட்கிறாா்கள்..!

தமிழ் மக்களும் இந்த நாட்டில் சம அந்தஸ்த்துடன், கௌரவத்துடன் வாழ்கின்ற காலத் திலேயே இலங்கை ஒரு பூரணமான நாடாக மாறும். என வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் கூறியிருக்கின்றாா். 

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற வட மாகாண பண்பாட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,  தமிழ் என்று சொல்லும் போதே தடங்கல் இருக்கும் 

என்பதை ஆளுநராக கடமையாற்றிய கடந்த 8 மாதங்களில் அறிந்து கொண்டேன். ஆனால் அந்த தடைகளை நாம் உடைத்து மீண்டும் தலைதூக்கிய ஒரு தேசமாக, உலகம் எம்மை திருப்பி பார்க்க கூடிய ஒரு தேசமாக 

உலகிற்கு நன்மை செய்ய கூடிய தேசமாக மாற வேண்டும். அதற்காக உடைந்து போயிருக்கின்ற அத்திவார கற்களை ஒன்றாக சேர்த்து மணிமண்டபம் கட்டவேண்டும் என்பது தான் எனது அவாவாக இருக்கிறது.

நான் கொழும்பிலே வாழ்ந்து, பணிபுரிந்து, வெளிநாட்டிலே கல்வி கற்று, என்னுடைய வாழ்கையை எளிமையான பௌத்த சித்தாந்தத்தின் கீழாக வைத்திருந்தாலும் என்னுடைய ஆன்மா இன்னும் தமிழனாக இருக்கிறது 

என்பதை இந்த நாதஸ்வர வித்துவான்கள் நினைவு படுத்திகொண்டார்கள். நான் அடிப்படையாக தமிழனாக இருக்கின்றேன். அப்படிதான் இருக்க வேண்டும் என்ற நினைவு எனக்கு வந்தது. இன்று ஒரு அரசியல் தீர்மானம் எடுப்பதற்கு 

வரலாறு எங்களை தள்ளியிருக்கின்றது. நீதி, நியாயம், தர்மம் எங்கு இல்லையோ, இந்த அப்பாவி மக்களை பாதுகாக்கக்கூடிய அரசு, அரசாங்கம், அரசன் எங்கு இல்லையோ அந்த நாடு ஒருநாளும் விடிவடையாது.

எனவே இந்த நாட்டில் சமத்துவமான சம குடிகளாக, கௌரவத்துடன் தமிழர்கள் எப்போது வாழ்கின்றார்களோ அப்போது தான் இலங்கை ஒரு பூரணமான நாடாக மாறும் என கேட்கவேண்டியவர்களிற்கு நாம் பகிரங்கமாக 

சொல்ல தயாராக இருக்கின்றோம். இது தான் எங்களுடைய ஆதங்கம். நான் கொழும்பு போகும் போது என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி தமிழர்களது வாக்குகளை எப்படி பெற்றுக்கொள்ளலாம் சொல்லுங்கள் என்று.

தமிழர்களுடைய வாக்கு சுப்பர்மாக்கெட்டில் விற்கபடுகின்றது என்று அவர்கள் நினைக்கின்றார்கள். நான் அவர்களிற்கு சொல்லும் ஒரே பதில் உங்கள் அரசாங்கம், அரசு, அரசியல் 72 வருடங்களாக நாம் வேண்டுவதை புரிந்து கொள்ளாமல் 

நீங்கள் அரசியல் செய்கின்றீர்கள். தமிழர்கள் கேட்பது ஒரே ஒரு விடயம் எமது கலை, கலாச்சாரம், அரசியலையும், இனத்தையும், சமமாக, சமாதானமாக வாழ வேண்டிய இடத்தை மட்டும் எங்களிற்கு தாருங்கள் என்பது மட்டுமே 

எங்கள் கோரிக்கை.அந்த வேண்டுகோள் திரும்பவும் கேட்டகப்பட வேண்டும். அது கேட்ட வேண்டியது கொழும்பிற்கோ, புதுடில்லிக்கோ, ஜெனிவாவிற்கு என்றாலும் அங்கே கேட்க வேண்டும். 

தமிழர்கள் ஒரு இனம் ஆகையினால் இனத்திற்கு சொந்தமான எல்லா உறுதிகளும் எங்களுக்கு தேவையானது, அந்த உறுதிகளையும் உண்மைகளையும் எங்களுக்கு தர வேண்டும் என்பது தான் எமது வேண்டுகோள் என குறிப்பிட்டுள்ளார்.