செஞ்சோலை காணியில் குடியிருக்கும் மக்களை அதிரடியாக சந்தித்த டக்ளஸ்..! தீா்வை தருவேன் என சபதமாம்..

ஆசிரியர் - Editor I
செஞ்சோலை காணியில் குடியிருக்கும் மக்களை அதிரடியாக சந்தித்த டக்ளஸ்..! தீா்வை தருவேன் என சபதமாம்..

கிளிநொச்சி- செஞ்சோலை காணி விவகாரம் தொடா்பாக நாடாளுமன்ற உறுப்பினா் டக்ளஸ் தேவானந்தா இன்று நோில் சென்று பாா்வையிட்டு காணிகளை மீட்டு கொடு ப்பதாக உத்தரவாதம் வழங்கியிருக்கின்றாா். 

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்லம் அமைந்துள்ள குறித்த காணியில் 54 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். செஞ்சோ லை சிறுவர் இல்லத்தில் வளர்ந்து இன்று குடும்பங்களாக 

வாழ்வை ஆரம்பித்துள்ள குடும்பங்கள் குறித்த கணியை படையினர் விடுவித்ததை அடுத்து அங்கு குடியேறி வாழ்வனை ஆரம்பித்திருந்தனர்.  இந்த நிலையில் குறித்த காணியில் குடியேறியுள்ள செஞ்சோலை குடும்பங்களை

15.10.2019ம் நாள் அல்லது அதற்கு முன்பதாக வெளியேறுமாறு கரைச்சி பிரதேச செயலகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். குறித்த காணியின் உரிமையாளர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டிற்கமைவாக 

குறித்த நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த காணியில் செய்சோலை சிறுவர் இல்லம் அமைந்திருந்த அதேவேளை, யுத்தம் நிறைவுற்று மீள்குடியேறியபோது குறித்த காணியில் படையினர் முகாம் அமைத்திருந்தனர்.

குறித்த காணியை படையினர் விடுவிப்பு செய்ததை அடுத்து காணியில் செஞ்சோ லை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த பிள்ளைகள் குடும்பமாகிய நிலையில் தமது குடு ம்பத்தினருடன் குடியேறினர். 

54 குடும்பங்கள் குறித்த காணியில் வாழந்து வந்த நிலையில் குறித்த காணியில் கொட்டகைகளை அமைத்து அவர்கள் தமது வாழ்க்கையை முன்னெடுத்து வந்தனர். இந்த நிலையில் குறித்த காணியினை 

செஞ்சோலையிலிருந்து வளர்ந்து குடும்பங்களாக அங்கு குடியேறியுள்ள மக்களிற்கே பகிர்ந்தளிக்க வேண்டும் என கடந்த 11.04.2019 அன்று கிளிநொச்சி மாவட்ட செயலக த்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிரு்ததி குழு கூட்டத்தில் 

தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிலை இவ்வாறு இருக்க குறித்த காணியினை உரிமைகோரி 16 குடும்பங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இவ்விடம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தனர். 

காணி ஆவணங்களை சமர்ப்பித்திருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பிரதேச செயலகத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சூழலில் குறித்த காணியை விட்டு வெளியேறுமாறும், இல்லையேல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பிரதேச செயலகத்தினால் நேற்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த காணியில் குடியமர்ந்துள்ள செஞ்சோலை பிள்ளைகள் கவலை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று காலை குறித்த பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் 

மேற்கொண்டு குடும்பங்களுடன் கலந்துரையாடியிருந்தார். குறித்த காணியின் உரிமம் தொடர்பில் தீர்க்கமான தீர்வொன்றை பெற்றுத்தருவதாக அவர் தெரிவித்தார். காலம் கடந்த நிலையில் குறித்த பிரச்சினையை என்னிடம் தந்துள்ளீர்கள். 

இந்த பிரச்சினை முற்கூட்டியே எனக்க கிடைத்திருந்தால் தீர்வை உடனே பெற்றிருக்க முடியும். தற்புாது நான் அரசில் இல்லை. கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இந்த பிரச்சினை தொடர்பில் உடர்மட்டத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். 

விரைவில் குறித்த காணி விடயம் தொடர்பில் திருப்திகரமான தீர்வை பெற்றுத்தருவேன் என அவர் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வழங்கிய வாக்குறுதிகளை என்றும் நிறைவேற்றியது கிடையாது. 

ஆனால் நான் அவ்வாறு அல்ல. செய்வதையே சொல்வேன். என்னை நம்புங்கள். இந்த விடயத்தை செய்து முடிப்பதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படும். புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதை அடுத்த இப்பிரச்சினைக்கு நிரந்தரமானதும், 

திருப்திகரமானதுமான தீர்வை பெற்றுத் தருவேன் எனவும் செஞ்சோலை சமூகத்திற்கு அவர் வாக்குறுதி அளித்திருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு