மன்னாா் கடல்வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 3 டொண் கடலட்டை தமிழகத்தில் சிக்கியது..!

ஆசிரியர் - Editor I
மன்னாா் கடல்வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 3 டொண் கடலட்டை தமிழகத்தில் சிக்கியது..!

மன்னாா் கடற்பகுதி ஊடுாக இலங்கைக்குள் கடத்தப்படவிருந்த 3 டொண் கடல் அட் டைகளுடன் இருவா் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். 

மன்னார் வளைகுடா கடல்  பகுதியில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக இலங்கைக்கு கடல் அட்டை கடத்தப்படுவதாக மண்டபம் 

வனத்துறை வனசரகர் வெங்கடேஷ்க்கு  கிடைத்த ரகசிய தகவலையடுத்து இன்று அதிகாலை முதல் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில்  

ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வனத்துறை சோதனை சாவடி அருகே கடலில் 

சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த நாட்டு படகை சோதனை செய்ய முயன்ற போது வனத்துறையினர் அதிகாரிகளை கண்டதும் 

இருவர் படகில் இருந்து கடலில் குதித்து தப்பிக்க முயற்ச்சித்தனர் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்த வனத்துறையினர்; நாட்டு படகை சோதனை செய்தனர்.

அப்போது படகில்  261 மூடைகளில் 3,200 கிலோ  எடை கொண்ட பதபடுத்தப்படாத கடல் அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது 

தெரியவந்ததையடுத்து  கடத்தல்கார்ர்களுடன் கடல்அட்டைகள், நாட்டுபடகை பறிமுதல் செய்த   அதிகாரிகள் மண்டபம் வனத்துறை அலுவலகத்திற்கு 

எடுத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மண்டபம் வனசரகர் வெங்கடேஷ் மன்னார் வளைகுடா 

கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டை கடத்தபடுவதாக கிடைத்த தகவலையடுத்து மண்டபம் வனத்துறை சோதனை சாவடி அருகே 

உள்ள தெற்கு கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது நாட்டுபடகில் இலங்கைக்கு கடத்துவதற்க்காக 

பதுக்கி வைக்கப்பட்ட 3200 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டைகள் இருந்து தெரியவந்ததையடுத்து கடத்தலில் ஈடுபட்ட வேதாளை பகுதியை சேர்ந்த

சாகுல் ஹமீது (31) மற்றும் கருப்பையா (45) ஆகிய இருவரையும் கைது செய்ததுடன் படகையும் கடல் அட்டைகளை பறிமுதல் செய்து விசாரனை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை மற்றும் படகின் மதிப்பு 40 லட்சம் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு