அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 14 தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன..! இப்போதும், சம்ந்தன் மௌனம்..

ஆசிரியர் - Editor I
அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 14 தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன..! இப்போதும், சம்ந்தன் மௌனம்..

அம்பாறை மாவட்டத்தில் 14 தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்டிருக்கும் நிலையில் சம்ம ந்தன், மாவை சேனாதிராஜா போன்றவா்களை இனியும் நம்பபோவதில்லை. என அகி ல இலங்கை பொது ஊழியா் சங்க தலைவா் எஸ்.லோகநாதன் கூறியுள்ளாா். 

கிளிநொச்சியில் இன்று பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்திற்கான  அகில இலங்கை பொது ஊழியர் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வ இன்று இடம்பெற்றது. 

குறித்த நிகழ்வின் நிறைவில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் 14 தமிழ் கிராமங்கள் இன்று காணாமல் போயுள்ளது. இவ்வாறான விடயங்களில் 

தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டும் காணாமலும் உள்ளது. இவ்வாறு பல சந்தர்ப்பங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு முறையாக கையாளவில்லை. பிரதேச சபை தரம் உயர்த்துதலிலும் அவர்கள் அக்கறை செலுத்தவில்லை. 

இவ்வாறான நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுகபுாகங்களை அனுவித்து வருகின்றனர். அவர்களை நாங்கள் தொடர்புகொண்டால் இப்போது பேச முடியாது, நாங்கள் பிசி என்கின்றார்கள். 

இன்றய நிகழ்விற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனை அழைத்திருந்தேன். ஆனால் அவர் வருகை தரவில்லை. இனியும் தமிழ் தேசிய கூட்டமைப்பை நம்பவோ, சம்பந்தன் சேனாதிராஜா ஆகியுாரின் அரசியலை நம்பபோவதில்லை 

என அவர் குறிப்பிட்டார். மாகாண சபை தேர்தலின்போது மிகுந்த கடினங்களிற்கு மத்தியில் நாம் மாகாண சபைக்காக உழைத்தோம். ஆனால் மாகாண சயைால் எதையும் செய்ய முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார். 

நடைபெறவுள்ள தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கே நாம் ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு