வெளிநாட்டிலிருந்துவந்த 26 லட்சம் ரூபாய் பணத்தை மறைத்து நாடகமாடிய வா்த்தகா் சிக்கினாா்..!
வெளிநாட்டிலிருந்து அனுப்பபட்ட பணத்தை மறைத்துவைத்த வா்த்தகா் ஒருவா் அந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய நிலையில் பொலிஸாாினால் கைது செய்யப்பட்டிருக்கின்றாா்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் இருவர் தன்னிடம் இருந்த பணத்தை திருடி சென்றதாக நபர் ஒருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.எனினும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து
இரண்டு மணித்தியாலங்களுக்குள் குறித்த வர்த்தகரின் உதவியாளரிடம் பொலிஸார் பணத்தை பெற்றுள்ளனர். இது திட்டமிட்ட கொள்ளை என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் வசிக்கும் வர்த்தகரின் மனைவியின் உறவினர் 26 இலட்சம் ரூபாய் பணம் அனுப்பி வைத்துள்ளார்.அந்த பணத்தை வர்த்தகர் தனது மகளின் கணக்கில் வைப்பிலிடுவதற்காக வங்கிக்கு சென்றுக் கொண்டிருந்த போது,
அடையாளம் தெரியாத இருவர் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக வர்த்தகர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.முறைப்பாட்டிற்கமைய உடனடியாக செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபர்களை தேடி வந்தனர்.
அதற்கமைய வங்கிக்கு அருகில் இருந்த சிசிடீவி கமராவின் உதவியுடன் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் திட்டமிட்டனர். சிசிடீவியில் பதிவாகியிருந்த காட்சியை சோதனையிட்ட போது,
குறித்த வர்த்தகர் விருப்பத்துடன் பணத்தை வழங்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வர்த்தகரை அழைத்து நீண்ட விசாரணை மேற்கொண்ட போது தனது மகளுக்கு பிரித்தானியாவிலிருந்து பணம் வந்துள்ளதாகவும்,
தான் அதிக கடன் பிரச்சினையால் சிக்கியிருப்பதாகவும் அதில் இருந்து தப்பிப்பதற்கு இந்த பணத்தை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டதாகவும் வர்த்தகர் கூறியுள்ளார். அதற்காக இவ்வாறு நாடகமாடியதாக அவர் பொலிஸாரிடம்
ஒப்புக் கொண்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.