அம்பாறையில் பதற்றம்..! பொலிஸாா் களத்தில்..

ஆசிரியர் - Editor
அம்பாறையில் பதற்றம்..! பொலிஸாா் களத்தில்..

அம்பாறை மாவட்டத்தில் அரச சாா்பற்ற நிறுவனம் ஒன்று காணிகள் சம்மந்தமாக நடாத்திய நிகழ்வுக்கு எதிராக மக்கள் கூடியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

மனித உயர்வு மையம் என்கிற அமைப்பினால் நிகழ்வொன்று இன்று காலை நடத்தப்பட்டது. காணி அபகரிப்பு, இருப்புக்களை கையகப்படுத்துவதை தடுத்தல் போன்ற விடயங்கள் குறித்து இதன்போது விழிப்புணர்வு நடத்தப்பட்டுள்ளது.

எனினும் தேர்தல் காலம் என்பதால் இப்படியான நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என்ற அறிவிப்பு தெரிவத்தாட்சி அதிகார அலுவலகத்திடம் இருந்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை அல் சக்கி மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது மண்டபம் முன்னால் திரண்ட மக்கள் இந்த நிகழ்வை நடத்தவிடாமல் ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.இதனையடுத்து அந்த இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Radio
×