நல்லுாா் பிரதேசசபையில் கண்டன தீா்மானம்..!

ஆசிரியர் - Editor I
நல்லுாா் பிரதேசசபையில் கண்டன தீா்மானம்..!

தமிழ் ஊடகவியலாளர் தி.சோபிதன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு நல்லூர் பிரதேச சபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபை மண்டபத்தில் தவிசாளர் தியாகமூர்த்தி தலமையில் 

இன்று நடைபெற்றது. இந்த அமர்வில் சபையின் உப தவிசாளர் ஜெயகரன் குறித்த கண்டனத்தை சபைக்கு கொண்டு வந்தார்.அவர் அங்கு தெரிவிக்கையில்,தமிழ் தேசிய பத்திரிக்கையான வீரகேசரி பத்க்திரிக்கையின் 

யாழ்ப்பாண அலுவலக செய்தியாளர் தி.சோபிதன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு பொலிஸ் தலமையகத்திற்கு அழைக்கப்பட்டார். நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் வசிக்கும் குறித்த செய்தியாளர் 

இரு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வீதி விபத்தில் காலில் படுகாயம் அடைந்து நடக்க முடியாத நிலையில் உள்ளார்.அவ்வாறான நிலையில் குறித்த விசாரணையை யாழ்ப்பாணத்திற்கு மாற்றி தருமாறு கோரிய போதிலும் 

திகதியில் மாற்றம் செய்யலாம் விசாரணைக்கு கொழும்பு க்கே வரவேண்டும் என மனிதாபிமானம் அற்ற முறையில் நடந்துள்ளனர்.பொலிசாரின் இந்த மனிதாபிமான அற்ற செயலை கண்டிப்பதுடன் ஊடகவியலாளர்களை 

விசாரனைக்கு அழைப்பதன் ஊடாக அவர்களின் சுதந்திர த்தை நசுக்குகின்ரனர்.கடந்த காலங்களில் ஊடகவியலாளர் கள் எவ்வாறு நசுக்கப்பட்டனரோ அதேபோல தற்போதைய ஆட்சியிலும் 

ஊடகவியலாளர் கள் விசாரனை என்ற பெயரில் மறைமுகமாக மிரட்டப்படுகின்ரனர். இதேவேளை டக்ளஸ், வரதர் தரப்புக்கள் கோத்தபாயவுடன் இணைந்து தமிழர்களை நசுக்க கங்கனம் கட்டுகின்ரனர் என்ற செய்தியை 

வெளியிட்டமைக்காக குறித்த ஊடகவியலாளர் கொழும்பு க்கு அழைக்கப்பட்டு அவரிடம் இரண்டரை மணி நேரம் விசாரனை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு