நீராவியடியில் மீண்டும் பதற்றம்..! பொலிஸாாின் பாதுகாப்பில் தமிழ் மக்களை அச்சுறுத்திய சிங்கள நபா்..
முல்லைத்தீவு- நீராவியடி பிள்ளையாா் ஆலயத்தில் விசேட சாந்தி பூசை இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் பொலிஸாாின் பாதுகாப்பில் சிங்கள நபா் ஒருவா் தமிழ் மக் களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கோவில் வளாகத்தில் அத்துமீறித் தங்கியிருந்த பௌத்த பிக்கு கடந்த மாதம் மரணமடைந்த நிலையில். அந்தப் பிக்குவினுடைய உடலை நீதிமன்ற உத்தரவினை மீறி ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் மற்றும் சிங்கள மக்கள்
இணைந்து நீராவியடிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் தகனம் செய்திருந்தனர். இந்நிலையில் இவ்வாறு இடம்பெற்ற இந்த துர் சம்பவத்தையடுத்து, விசேட சாந்தி பூசை நிகழ்வொன்றை 11.10.2019 இன்று நீராவியடிப்பிள்ளையார்
ஆலய நிர்வாகத்தினர் ஒழுங்குசெய்திருந்தனர். கோவில் வளாகத்தில், விசேட சாந்தி பூசை நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை, அந்தப்பகுதிக்கு வந்த பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர்,
அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்தார். கோவில் வளாகத்தில் போலீஸ்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நீராவியடிப்பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்
ஆகியோர், போலீஸாரிடம் குறித்த நபரின் அச்சுறுத்தல் செயற்பாடுகுறித்து முறையிட்டபோதும், போலீஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது. இதனால் அங்கு வழிபாடுகளுக்காக
வந்த தமிழ் மக்களுக்கும், குறித்த நபருக்குமிடையில் வாக்குவாதங்கள் இடம்பெற்றன.இதன்போது அங்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த போலீஸார், குறித்த நபருக்கு ஆதரவாக செயற்பட்டதுடன்,
தமிழ்மக்களை விலகுச்செல்லுமாறு கூறியதைக் காணக்கூடியதாகவிருந்தது.