SuperTopAds

இரணைதீவில் பாாிய நடமாடும் சேவை..! மீள்குடியேறி பல மாதங்களின் பின் மக்களுக்கு ஆறுதல்..

ஆசிரியர் - Editor I
இரணைதீவில் பாாிய நடமாடும் சேவை..! மீள்குடியேறி பல மாதங்களின் பின் மக்களுக்கு ஆறுதல்..

கிளிநொச்சி- இரணைதீவு மக்களுக்கான நடமாடும் சேவை ஒன்று இலங்கை மனித உாிமைகள் ஆணைக்குழுவின் ஒழுங்கமைப்பில் இன்று காலை 11 மணிக்கு இரணை தீவில் நடாத்தப்பட்டி ருக்கின்றது. 

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனம் 2017ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி குறித்த பகுதியில் மக்கள் குடியேறிய காலப்பகுதியிலிருந்து அவர்களின் அடிப்படை தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தது. 

இதனடிப்படையில் குறித்த விடயங்கள் தொடர்பில் குறித்த நிறுவனம் அப்பகுதி மக்களுடன் இணைந்து 2019 இரண்டாம் மாதமளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தனர். 

தொடர்ந்து குறித்த பகுதிக்கு 01.03.2019 அன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில் குறித்த பகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தனர். 

தனடிப்படையில் இன்று குறித்த நடமாடும் சேவையானது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஏற்பர்டு செய்யப்பட்டிருந்தது,குறித்த நடமாடும் சேவைக்காக 16 அரச நிறுவனங்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், 

அவற்றின் ஊடாக இப்பகுதியில் வசிக்கும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை ஆராயப்பட்டு அவர்களிற்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் வகையில் குறித்த நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளதாகவும் 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலக இணைப்பாளர் கனகராஜ் தெரிவித்தார். இதேவேளை குறித்த பகுதியில் இயற்கை வழளங்களை சூரையாடப்புடுவதாக இன்று பொலிசாரிடம் 

பிரதேச மக்கள் நடமாடும் சேவையில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தனர். அப்பகுதியில் உள்ள மணல், கற்றாளை, மாடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் வேறு நபர்களால் சூரையாடப்படுவதாகவும், 

குறித்த நடவடிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பொலிசாரிடம் மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த முறைப்பாடு தொடர்பில் மக்கள் ஊடகங்களிற்கும் கருத்து தெரிவித்தனர்.